கடந்த இரண்டரை வருடங்களாக தொடர்ச்சியாக என்னுடைய ஹைக்கூ கவிதைகள் அருவி காலாண்டிதழில் வெளிவந்து கொண்டிருந்தன.
கடந்த அருவி அக் - டிச ௨௦௧௩ காலாண்டிதழில் என்னுடைய கீழ்க்கண்ட கவிதை (நவீனம்) வெளிவந்துள்ளது.
அருவி ஸ்ரீநிவாசன் ஐயாவுடன் அலைபேசியில் பேசும்போது 'முனைவென்றியா இப்படி எழுதுவது? இப்படியெல்லாம் எழுதுவாரா? என்று ஆச்சர்யமாக இருந்தது. நீங்கள் அனுப்பிய நவீனம் சார்ந்த இரண்டு கவிதைகளுமே அருமை. முதல் கவிதையைவிட இரண்டாவது நன்றாகவும் இரண்டாவதைவிட முதல் கவிதை அருமையாகவும் இருந்தது. வரும் காலாண்டிதழில் மற்றொரு கவிதையை இப்பொழுதே தேர்வு செய்து வைத்து விட்டேன்.' என்றார்.
மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
No comments:
Post a Comment