Wednesday, May 15, 2024
பிரகதிக்குப் பிறந்தநாள் (16-05-2024) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...
Wednesday, May 8, 2024
இசையமைப்பாளர்/தானியங்கி (auto) ஓட்டுநர் மெட்டில், இசையில், குரலில் நேற்று நான் மெட்டமைத்து, எழுதி, பாடி வெளியிட்ட என் மகள் ரிதன்யா குட்டிக்கான பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்
பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/M83tOYbXVcc
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: திரு. கோபி
பாடியவர்: திரு. கோபி
சில மாதங்களுக்கு முன்பு தானியங்கியில் (auto) செல்ல முயற்சித்து ஒரு ஓட்டுநரின் வண்டியில் பயணித்தோம். மூத்த மகள் ரிதன்யா விடம் keyboard ற்கான இசைப்பயிற்சி செல்வதற்கான நேரம் குறித்து பேசிக் கொண்டே சென்றோம். உடனே ஓட்டுநர் என் மகளிடம் இசைப்பயிற்சி குறித்து விரிவாகப் பேசினார். நான் குறுக்கிட்டு "இசையில் ஆர்வம் உண்டா?" என்று கேட்டேன். அவரும் "நான் ஒரு இசையமைப்பாளர். என் மகனுக்கு பயிற்சி அளித்து அவன் தற்போது keyboard நன்றாக வாசிப்பான்" என்றபடியே அவரின் youtube channel ன் சிலவற்றை அனுப்பி பார்க்கச் சொன்னார்.
அதன்பிறகு நான் வெளியிடும் youtube விழியங்களை அவருக்கு அனுப்புவேன். அவர் எனக்கு அனுப்பினார். நேற்று நான் மெட்டமைத்து எழுதி பாடிய பாடலின் இணைப்பை அனுப்பிய உடனே பாடல் வரிகளை அனுப்புங்கள், ரிதன்யாவின் புகைப்படங்களை அனுப்பச் சொல்லி நேற்று மாலை எனக்கு என் பாடல் வரிகளில் அவரின் வேறு ஒரு மெட்டில் அவரின் குரலில் இசை சேர்த்து இந்த விழியத்தை அனுப்பினார்.
குரலும் இசையும் அருமை. ஒரு மணி நேரத்தில் வேறு ஒரு மெட்டில் பாடலை உருவாக்கி விட்டார். இசையமைப்பாளர் கோபி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
Tuesday, May 7, 2024
ரிதன்யா குட்டிக்கு பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...
Thursday, April 25, 2024
விஷ்ணுவின் பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...
Monday, April 8, 2024
அண்ணிக்குப் பிறந்தநாளு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...
Friday, February 9, 2024
வானொலி என் காதலி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...
Friday, February 2, 2024
திருவள்ளுவர் யார்?
நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை, ஐந்தாம் தமிழர் சங்கம்
திரு வல்லவர்.
திரு = முருகன்.
வல்லவர் = கிருஷ்ணர்.
முருகன் அருளிய ஆசீவக மெய்யியலை குறள் வடிவில் செய்யுள் வடிவில் நமக்கு எழுதியவர் திரு என்ற முருகனை தன் அப்பனாக வழிபட்ட வல்லவரான கிருஷ்ணனே.
அதனால் தான் கர்ணன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா தென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா" என்று வல்லவனான கிருஷ்ணனைப் பற்றிய பாடல்.
ஆக, திருவள்ளுவர் என்பது முருகனையும் கிருஷ்ணனையும் உள்ளடக்கிய ஒரு உருவகமே.