Thursday, May 1, 2014
Sunday, April 27, 2014
தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' (NOTA - None Of The Above) வாக்குகள் பதிவு
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' வாக்குகள் பதிவானதாக ஒரு செய்தி படித்தேன். மகிழ்ச்சியடைந்தேன்.
தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ ஏழு கோடிப் பேர்களில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள் ஏறத்தாழ நான்கரை முதல் ஐந்து கோடிப் பேர்கள் இருப்பார்கள்.
ஒன்றரை கோடி 'வாக்களிக்க விருப்பமில்லை' வாக்குகள் பதிவானதற்கு பதிலாக எழுபத்தைந்து விழுக்காடு அதாவது மூன்றுகோடி பதிவாகியிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
கடந்த வாரம் பரமக்குடி சென்றிருந்தபோது என் அம்மாவிடம் "வாக்களிக்க விருப்பமில்லை' (NOTA) என்ற சின்னத்தில் வாக்களி" என்று சொன்னேன். "எனக்கும் வரவர வாக்களிக்க விருப்பமில்லாமல்தான் இருக்கிறது. நான் அப்படி செய்தால் என்னுடைய வாக்கு செல்லாத வாக்காகி விடாதா?" என்று கேட்டாள். "அம்மா, நீ வேண்டுமானால் பார். நிறைய பேர் NOTA வில் தான் வாக்களிப்பார்கள். நம்முடைய இந்த வாக்குகள் நிச்சயம் பெருகும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றும். அப்போது அதிசயிக்கத்தக்க மாற்றங்கள் நிகழும்." என்று சொன்னேன்.
"யாருக்கு வாக்களித்தாய் அம்மா?" நேற்று என் அம்மாவிடம் கேட்டேன். "நீ சொன்னதுபோலவே NOTA வில் தான் வாக்களித்தேன்." என்றாள்.
தி.மு.க மாற்றும் காங்கிரசுடன் பேரம் பேசி பேரம் படியாததால் பா.ஜ.க. விடம் பெட்டி பெட்டியாய் பணம் வாங்கிக் கொண்டு பா.ஜ.க விற்கு ஆதரவாக தே.மு.தி.க தேர்தல் பரப்புரை செய்ததாக செய்திகள் வெளியாயின.
"விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை. கார்பரேட் கம்பெனிதான் ஆரம்பித்துள்ளார்." என்று கடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க வை எதிர்த்து தேர்தல் பரப்புரை செய்த வைகைப்புயல் வடிவேலு சொன்னது மிகச்சரியான வார்த்தை என்று இப்போது தெரிகிறது.
நஷ்டம் என்கிறார்கள். இலாபம் என்கிறார்கள். இலாபம் வரும்போது மட்டும் ஆளாளுக்கு தின்று ஏப்பம் விட்டுறானுங்க. நஷ்டம் என்று கணக்கு கட்டி எங்களோட தலைல கட்டப்பார்க்கறீங்க? ஏண்டா மொள்ளமாரி நொன்னைகளா?
இந்தியாவின் போதைக்கு தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களாகிய நாங்களும் ஈழத்தமிழர்களும் ஊறுகாய். உங்களோட போதைக்கு நாங்க ஊறுகாயாடா வெண்ணைகளா?
சீமான் அண்ணாச்சி,
அ.தி.மு.க விற்கு தாங்கள் நன்றி நவில்வது வேறு. வாக்களிக்க ஆதரவு தருமாறு பரப்புரை செய்வது வேறு. நம்முடைய தமிழ்நாட்டில் இலாபம் தரும் துறைகள் பல இருந்தும் அவற்றையெல்லாம் பதுக்கி வைத்துவிட்டு நஷ்டம் நஷ்டம் என்று பஞ்சப்பாட்டு பாடும் இந்த ஜெயலலிதாவால் மத்தியில் என்ன கிழித்துவிட முடியுமென்று நீங்கள் ஆதரவு திரட்டினீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை விஜயகாந்த் பா.ஜ.வி டம் பெட்டி பெட்டியாய் பணம் வாங்கியதுபோலவே தாங்களும் அ.தி.மு.வி டம் வாங்கியிருக்கிறீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
கட்சி ஆரம்பித்த புதிதில் "நாம் தமிழர் கட்சி மற்றுமொரு அரசியல் கட்சியல்ல. மாற்று அரசியல் புரட்சி." என்றெல்லாம் சொன்னீர்களே... இன்று நீங்களும் அந்த திராவிடமெனும் குழிக்குள்ளேயே விழுந்து விட்டீர்களே? இது நியாயமா அண்ணாச்சி?
எப்படியாயினும் நம்முடைய தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தி நாம்தான். பொறுத்திருந்து பார்ப்போம்.
போராட்டத்தில் குதிக்கும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்.
தேர்தல் முடிந்தது.. ஆரம்பித்தது 'பவர் கட்'.. ஆங்காங்கு போராட்டத்தில் குதிக்கும் மக்கள்
Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/power-cut-looms-large-again-tn-lse-199333.html
இந்த லட்சணத்தில் இன்னும் ஒன்றரை மாதங்களுக்குள் மின்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறதாம்.
தமிழ்நாடு மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறதாம். அதனால் இந்த முடிவாம்.
ஏற்கனவே பஞ்சப்பாட்டு பாடித்தான் பால், பேருந்து கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் ஆகியவற்றின் விலையை ஜெயலலிதா ஏற்றினாள். இப்போது மீண்டும் அதே மக்கள் விரோத ஆட்சி தொடர்கிறது தமிழகத்தில்.
இந்த இலட்சணத்தில் நாம் தமிழர் அண்ணாச்சி சீமான் அதிமுக விற்கு வாக்களிக்க கேட்டு பரப்புரை செய்தார்.
இங்கு எல்லோரும் சுயநல அரசியலை முன்னெடுக்கத் துவங்கிவிட்டனர். சீமான் உட்பட எல்லோருமே ஈழத்தை வைத்தும் தமிழக மக்களின் ஏழ்மையை சொல்லிச்சொல்லியும் அரசியலில் சொத்து சேர்க்கத் துவங்கிவிட்டனர். ஆதாயம் தேடத் துவங்கிவிட்டனர்.
இளிச்சவாயத் தமிழன் அடுத்தவன் வாயைப் பார்த்துக் கொண்டே எல்லாவற்றையும் கோட்டைவிடுகிறான். இவனாவது நம் கஷ்டங்களை புரிந்துகொள்வானா என்று ஏங்கிஏங்கி சாகிறான்.
ஏண்டா நான் தெரியாமத்தான் கேட்கிறேன். எல்லாமே நஷ்டம் நஷ்டம் என்றால், வருகிற லாபமெல்லாம் எங்கதாண்டா போகுது?

Saturday, April 26, 2014
my anna
நேற்று மதியம் என் தங்கச்சி பாமினியிடம் முகநூல் IM (Instant Message) ல் பேசினேன். 'உன்னிடம் பேசி இரண்டு மாதங்களாகி விட்டன. உடல்நிலை எப்படி உள்ளது ப்பா?' என்று கேட்டேன். 'உங்களிடம் பேச இயலாமைக்கு sorry my anna.' என்று அனுப்பினாள்.
'அண்ணாகிட்ட மன்னிப்பெல்லாம் கேட்கக்கூடாது டா' என்றேன்.
ஆத்தா,
நீயும் நானும் வித்யாசாகர் அண்ணாவின் செல்லப்பிள்ளைகள்.
உன்னுடைய my annaவை நீ பத்திரமாக வைத்துக்கொள். யாரிடமும் உன்னுடைய my annaவை கொடுத்துவிடாதே. சரியா?
அண்ணனென்று எப்போதும் அழைக்கின்ற மங்கை
எண்ணமதில் நினைவாக இருக்கின்ற தங்கை
..........
..........
செல்லச்செல்லப் பிள்ளையென சொல்லியுளம் துள்ளும்
கள்ளமில்லா உள்ளமதில் காணுமன்பு வெள்ளம்
..........
..........
..........
..........
..........
..........
கவிக்குயிலின் பாடல்களை கேட்பவன்தான் நானும்
செவியோரம் கேட்டுவிட்டால் சொட்டும்மலைத் தேனும்
..........
..........
..........
..........
வாசமுள்ள நமதுதமிழ் வார்த்தைகளால் பாட்டு
நேசமிக்க நெஞ்சமதில் நிறையுமூச்சுக் காற்று
..........
..........
ஆற்றுங்கவிச் செல்லம் - http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2014/04/blog-post_4447.html
---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்
Date: 2014-03-16 12:21 GMT+05:30
Subject: என் தங்கைக்கு இன்று பிறந்தநாள்.
To:
என் தங்கைக்கு இன்று பிறந்தநாள். அவள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாள்.
என்னுடைய அன்பும் வேண்டுதல்களும் அவளை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு தொடர்ந்து உயரத்தில் அவளை கொண்டுபோய் சேர்க்கும்.
அவ இன்னும் நிறைய சாதிப்பா.
Subscribe to:
Posts (Atom)