Monday, May 28, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (root cause) யார்?

👉 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மூல காரணம் (root cause) யார்?



காவல்துறையின் அராஜகம்.



👉 எப்படி?



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூறாவது நாளில் மனு கொடுப்பதற்காக சென்ற பொதுமக்களில் பெண்களின் நெஞ்சில் கை வைத்து காவல் துறையினர் அட்டூழியம் செய்துள்ளனர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கோபம் அடைந்திக்கலாம்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த cctv camera வில் பதிவான காட்சிப்பதிவில் பலபேர் சேர்ந்து அரசாங்க வண்டிகளை, உடைமைகளை கல்வீசி சேதப்படுத்தியுள்ளனர்.



இதை சாக்காக வைத்து காவல்துறையினர் அப்பாவி பொதுமக்கள் போராட்ட குணத்தை உயிர் பயம் காட்டி இனிமேல் போராட்டம் செய்தால் கொல்லுவோம் என்றே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.



உண்மையில் அங்கே கல் எறிந்தவர்கள் போராட்டக்காரர்களா இல்லை sterlite னால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையா என்பது தெரியவில்லை.



உண்மையை புரிந்து கொள்ளுங்கள் sterlite என்ற வணிகனின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடும் இந்திய அரசாங்கமும் கடந்த சில வாரங்களாக இருந்து வந்துள்ளன. இந்த வணிகர்களை தான் என் போன்றவர்கள் இல்லுமிநாட்டிகள் என்று சொல்கிறோம். 



அரசாங்கத்திற்கே வட்டிக்குப் பணம் கொடுத்து அந்த அரசாங்கத்தை தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருபவர்கள் இந்த இல்லுமிநாட்டிகள்.



உண்மை இப்படியிருக்க, "தமிழ்நாடு அரசு sterlite க்கு மின்சாரம், தண்ணீர் இணைப்புகளை துண்டித்து விட்டது" என்று எடப்பாடி தமிழ்நாடு அரசு, உண்மை புரியாத ஏமாளிகளான இளிச்சவாயன்களான நம்முடைய காதிலே பூ சுற்றுகிறது.



மோடி, எடப்பாடி போன்றவர்கள் இந்த sterlite போன்ற corporate களிடமிடமிருந்து கையெழுத்து போட்டு commission வாங்கி broker வேலை செய்து வளர்ச்சி என்று நாம் தலையில் மிளகாய் அரைப்பது இன்னுமா நமக்குத் தெரியவில்லை?



மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமும் வேதாந்தா குழுமத்திலிருக்க "தமிழ்நாடு அரசு sterlite ற்கான மின் இணைப்பை துண்டித்து விட்டது" என்பதெல்லாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றதாகும்.



வேதாந்தா குழுமத்தின் head office இங்கிலாந்தில் இலண்டனில் உள்ளது. இதன் முக்கிய பொறுப்பில் உள்ள அகர்வால் என்பவர் ஒரு சேட். அதாவது மார்வாடி. நம்மூரில் கோனார், அகமுடையார், வேளாளர் என்பது போல அகர்வால் என்பது ஒரு ஜாதிப்பட்டம்.



இந்தியாவின் இல்லுமிநாட்டிகள் இந்த பணியா (மார்வாடி) கும்பல் தான். இந்திய அரசாங்கத்தை இயக்குபவர்கள் இந்த இல்லுமிநாட்டிகளே.



தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட உயர் அதிகாரியின் மனைவி அந்த வேதாந்தா குழுமத்தோடு தொடர்புடையவர்.



இல்லுமிநாட்டிகளின் network இப்படித்தான் மறைமுகமாக இருக்கும். இவற்றையெல்லாம் அறிவின் துணைகொண்டு நாம்தான் ஆராய்ந்து உண்மையின் வேரைத்தேடி பயணிக்க வேண்டும்.



அரசாங்க, தனியார் வேலையில் பணி செய்து மாதம் ஒரு இலட்சம், ஒன்றரை இலட்சம் வாங்குபர்கள், அரசாங்கத்திடமிருந்து ஆதாயம் பெறுபவர்கள் ருசி கண்ட பூனையாகி இந்தப் பதிவினை வாசித்து விட்டு நமுட்டுச் சிரிப்போடு இதனை கடந்து போவார்கள். ஆனால் இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் வீட்டிலும் ஒரு உயிர் போன பிறகே, அரசாங்கத்திற்கு பின்னால் வணிகர்கள் உள்ளனர், அந்த corporate நிறுவனங்களை காப்பாற்றவே அரசாங்கம் துடியாய் துடிக்கிறது, துப்பாக்கிச்சூடு நடத்துகிறது, உயிர்களை கொல்கிறது என்ற உண்மை புரிய ஆரம்பிக்கும்.



நீ காற்றுள்ள பந்தை எவ்வளவுக்கெவ்வளவு தண்ணீரில் அமுக்குகிறாயோ அவ்வளவு வேகமாக பந்து தண்ணீரின் மேலே எழும். இதைப்போலத்தான், இன்றைய ஆங்கிலம் போல் ஒரு காலத்தில் வணிக மொழியாக இருந்த தமிழை பேசும், உயிரநேயம் போதித்த எம் தமிழினம் எவ்வளவுக்கெவ்வளவு அடக்கப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேலெழுந்து வரும். 



இந்த போராட்டங்களெல்லாம் தமிழ்நாடு என்ற தனிநாட்டிற்கான ஆரம்பமாகக் கூட இருக்கலாம்.

Tuesday, October 31, 2017

அன்பு மகளே




என்னன்பு மகளே என்னழகு மலரே
என்கனவின் நிலவே என்னுறவின் அழகே

உன்னழகு மழலையிலே அப்பான்னு அழைக்கயிலே
கண்ணோடு நீர்கொட்டும் காதோரம் தேன் சொட்டும்
கண்ணழகே மூக்கழகே காலழகே வாயழகே
உன்னழகை பார்த்தேதான் உண்மையிலே வியந்தேனே

உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
வான்கொஞ்சும் விண்மீனாய் நான்கொஞ்சும் பொன்மீனாய்
கண்முன்னே முழுநிலவாய் என்முன்னே எழில்மலராய்
கண்ணுள்ளே கருமணியாய் கலந்திட்ட கண்மணியே

மலரொன்று அழகாக மகளென்று பேர்சொல்ல
நிலவொத்த முகத்தோடு நீவந்தாய் தரணிதனில்
விலகாத அன்புடனே விரல்பிடித்து நீநடந்து
பழகுந்தமிழ் அழகுறவே பைந்தமிழ்நீ பேசவந்தாய்

பார்த்தவிழி மூடாமல் பார்க்கத்தான் தோன்றுதடி
சேர்த்தெடுத்த அகிலாக சிரிக்கின்ற உன்னழகு
கோர்த்தெடுத்த முத்துமாலை குழந்தையாக என்வீட்டில்
வார்த்தெடுத்த வதனமதில் வஞ்சியுந்தன் தாய்முகமே

பொம்மைக்குட்டி போலவேதான் பெண்குழந்தை பிறந்துவிட்டாள்
அம்மாடி ஆத்தாடி அழகாகப் பிறந்துவிட்டாள்
அம்மான்னு அப்பான்னு அழைக்கத்தான் பிறந்துவிட்டாள்
பொம்மாயி பெண்குழந்தை புதிபுதிதாய் கற்பனைகள்

நெஞ்சோடு நிறைந்தவளே நேசம்கொண்ட என்மகளே
பிஞ்சுமலர் சிரிப்பினிலே பித்தாச்சு என்மனமே
விஞ்சுகின்ற புகழோடு வாழ்வாயே நீயிங்கே
கொஞ்சுதமிழ் மொழிகொண்டு வாழ்த்துகிறேன் கவிதைவழி

Tuesday, April 18, 2017

என் செல்லம்

ஆறு மாதங்களுக்கு என் மனைவிக்காக ஒரு வெள்ளைத்தாளில் எழுதிய கவிதை. நேற்று எதார்த்தமாக எதையோ தேடும்போது இந்த கவிதை கிடைத்தது. தற்போது தட்டச்சு செய்தாகி விட்டது.

நீ எங்கள் வீட்டுத்தாரகை
என் நெஞ்சம் நிறைந்த தேவதை
பொங்கும் எங்கும் சந்தோசம்
புது உயிரால் கருவில் சங்கீதம்
என் உயிரில் கலந்த காதலிது
இது உனக்கும் உனக்கும் புரிகிறது
செல்லம் சொல்லிக் கொஞ்சுகிறேன்
என் உள்ளமெங்கும் உன்நினைவே
நீ இத்தனை நாளாய் காணவில்லை
என் திருமணம் தந்தது வானவில்லை
நிலவின் முதுகு இரகசியந்தான்
உன் அழகிய திருமுகம் அதிசயந்தான்
அழுதே கிடந்தேன் அன்றுவரை
இன்று ஆனந்தத்தில் அழுகிறேன்
குயிலின் குரலும் இனிமைதான்
உன் குரலும் தந்தது குயிலைத்தான்
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே
என் ஆயுள் நீண்டது பொன்மயிலே
நம் முன்னோர் செய்த புண்ணியமே
நம் பிள்ளை வயிற்றில் வளர்கிறது
நம் பெற்றோர் செய்த வேண்டுதலால்
நாம் இணைந்தே வாழ்கிறோம் நிம்மதியாய்
இன்றுமுதல் எனக்கு இரு பிள்ளை
என்றுமே எனக்கு நீ முதற்பிள்ளை
நினைப்பது எல்லாம் நடக்கிறது
என் நெஞ்சம் மகிழ்ச்சியில் திளைக்கிறது

Sunday, April 2, 2017

அறிமுக எழுத்தாளர்கள் கவனத்திற்கு...

2014ல் கடைசியாக கவிதை எழுதியது. அதன்பிறகு தானாக நின்று போனது. ஏனெனில், நான் வெளியிடட இரு நூல்களுக்கும் உரிமை ஆசிரியருக்கு என்று இரு நூல்களின் இரண்டாம் பக்கத்தில் அச்சிட்டு அதற்குரிய பணத்தையும் வாங்கிக் கொண்டு நூல்கள் வெளியிட்டு இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து முறைகேடான முறையில் அரசு அதிகாரிகளை கையூட்டு பெறவைத்து நூலாணையை பெற்று என் பெயருக்கு களங்கம் விளைவித்து என்னுடைய அந்த இரு நூல்களையும் புதிதாக "முதல் பதிப்பு" என அச்சிட்டு அவற்றை விற்று காசு பார்ப்பவை தான் பெரும்பாலான பதிப்பகங்கள்.

கடந்த 2014 தொடங்கி மூன்றாண்டுகளில் நிறைய அலைபேசி அழைப்புகள். அவற்றில் "நான் புதிதாக கவிதைநூல் வெளியிடவிருக்கிறேன். தங்கள் இருநூல்கள் வெளியிட்ட அந்த பதிப்பகம் மூலம் வெளியிடலாமா? அவர்கள் தான் நூலணையின் மூலம் நமது நூல்களை அரசு நூலகங்களில் வைக்க ஏற்பாடு செய்கிறார்களாமே" என்று கேட்டனர். "ஏமார்ந்து விடாதீர்கள். உங்கள் நூல்களை யார் சந்தைப் படுத்துவதற்கு உதவுகின்றனரோ, யார் உங்களை ஏமாற்றாமல் செய்து தருகின்றனரோ, யார் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மாடடார்களோ அவர்களிடம் போய் அச்சிட்டுக் கொள்ளுங்கள். இதற்கு பேசாமல் நீங்களே ஒரு பதிப்பகம் தொடங்கி அச்சிட்டுக் கொள்ளலாம்." என்றே கேட்பவர்களிடமெல்லாம் சொன்னேன்.
2014ல் எனக்கு துரோகம் செய்த அந்த பதிப்பக உரிமையாளனை மின்னஞ்சல் ஊடாக பத்து பேர் முன்னிலையில் தொடர்புகொண்டு நியாயம் கேட்டேன். "நீ அறிமுக எழுத்தாளன். என் வடிவமைப்புதான் சிறந்தது." என்று என்னை மட்டந்தட்டி தன்னை பெருமை அடித்துக் கொண்டான் அந்த பதிப்பக உரிமையாளன். அந்த பத்துப் பேரில் ஒருவன் "எல்லா பதிப்பகங்களும் இப்படித்தான். எல்லோருமே இப்படித்தான்." என்று சொன்ன, சாமி வணக்கமுங்க, அரைகுடத்தின் நீரலைகள் என்றெல்லாம் எழுதிய ஒருவனும் கூட அப்படித்தான் என்று அதன்பிறகு தான் புரிந்துகொண்டேன். இந்த துரோகத்தையும் துரோகிகளையும் மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் என் மனதிற்கு மூன்றாண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது போல.

2014ல் அருவி காலாண்டிதழின் ஆசிரியர் ஐயா சீனிவாசன் அவர்கள் ஒருமுறை அலைபேசி ஊடாக "சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ் பாடத்திட்டத்தில் வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஹைக்கூ கவிஞர்களில் நீங்களும் ஒருவர்." என்று சொன்னார். 2014ல் "குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்" என்ற என்னுடைய நூலிற்கு ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்களால் விருது கிடைத்ததற்கு பிறகு சில தினங்கள் கழித்து பெங்களூருவில் இருந்த எனக்கு அலைபேசி ஊடாக மறைந்த ஐயா எம். எஸ். தியாகராஜன் "தங்கள் கவிதையை நான் தான் தேர்வு செயதேன். உங்களை நான் நேரில் நான் சந்தித்ததில்லை. தங்களின் கவிதைகளை நான் உங்கள் நூலில்தான் படித்தேன். வடிவமைப்பிற்கான விருது அல்ல. உங்கள் கவிதைகளுக்கான விருது. தொடர்ந்து எழுதுங்கள். நான் சென்னையில் ஆலந்தூர் அருகில் தான் வசிக்கிறேன். வாய்ப்பிருந்தால் வீட்டிற்கு ஒருமுறை வாருங்கள்." என்று சொன்னார். "வடிவமைப்பை விட கவிதைகளுக்கான விருது" என்ற வார்த்தைகளை கேட்டபோதுதான் அந்த பதிப்பக உரிமையாளனின் "நீ அறிமுக எழுத்தாளன். என் வடிவமைப்புதான் சிறந்தது." என்ற பிதற்றல் அடிக்கடி என் நினைவிற்கு வந்தது.
நானும் ஒரு பதிப்பகம் துவங்கப் போகிறேன். அதன் பெயர் "விஷ்ணு பதிப்பகம்". நிறைய குடும்ப பொறுப்புகளை தாங்கி மூன்றாண்டுகள் கடந்துபோனது.