Friday, May 12, 2023

பிரகதி பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/NEJhYHaUZu0




வரும் மே 16 அன்று என் மறுமகள் பிரகதி என்ற பிரகதீஸ்வரிக்குப் பிறந்தநாள். அவளின் பிறந்தநாளிற்காய் நான் மெட்டமைத்த/எழுதிய/பாடிய பாடல்.

பொதுவாகவே குழந்தைகளுக்காக கவிதைகள், பாடல்கள் எழுதுவது, பாடுவது என்பது மகிழ்வான செயல். குழந்தைகள் என்பவர்கள் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். அவர்களைக் கொண்டாடுவதும் அவர்களின் குறும்புகளைப் பார்த்து மகிழ்வதும் அவர்களுக்கு கல்வி கற்பிப்பதும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டி நமக்குத் தெரியாததைத் தேடி நாம் கற்பதும் வாழ்க்கை மிகவும் ஆனந்தமாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

குழந்தைகள் காட்டும் உன்னதமான அன்பில் என் கடந்த கால நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக என் மூளையின் நினைவகத்திலிருந்து (memory) அழிக்கப்பட்டு மகிழ்ச்சி நிறையத் தொடங்குகிறது. 

மனம் நிறைய மகிழ்ச்சியோடு நாம் வாழ்வில் வரும் இடையூறுகளுக்கு தீர்வுகள் தேடும்போது ஏராளமான மாற்று வழிகள் மிகவும் எளிதாகவே கிடைக்கின்றன. அதுவே, நாம் மன இறுக்கத்தோடும் மன உளைச்சலோடும் இருந்துகொண்டு தீர்வுகள் தேடும் போது நாம் ஏற்கனவே செய்த மிகவும் சாதாரணமான தீர்வுகள் கூட நினைவிற்கு வராமல், நம் கண்களுக்கோ புத்திக்கோ புலப்படுவதில்லை, எட்டுவதில்லை.



அடடா பேரழகு
அசத்தும் பேரழகு
சொக்க வைக்கும் பேரழகு
சொல்லப்போனா நூறழகு

உந்த னழகில் மயங்கி நிற்கும்
மாமன் நான்தான் கண்ணே
தந்தனத் தானா பாடிட வைக்கும்
தங்கை மகளின் முன்னே

செல்ல மயிலே சொல்லு குயிலே
முல்லை மலரே கண்ணே
வெள்ளை நிலவே கொள்ளை அழகே
பிள்ளைத் தமிழே கண்ணே

சொல்லும் பொழுதில் செல்ல மெழுதும்
துள்ளு மிசையே வா வா
பிள்ளைக் குறும்பே முல்லை அரும்பே
துள்ளி நீயும் வா வா

எண்ணும் பொழுதில் உந்தன் நினைவே
சின்னக் குழந்தை வா வா
எந்தன் தங்கை பெற்ற மகளே
எந்த னழகே வா வா

அடடா பேரழகு
அசத்தும் பேரழகு
சொக்க வைக்கும் பேரழகு
சொல்லப்போனா நூறழகு

Sunday, May 7, 2023

ரிதன்யா பிறந்தாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/PBpoAYhbBrg


வரும் மே 9ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் என் மூத்த மகள் ரிதன்யாவுக்காக நான் மெட்டமைத்து, எழுதி, பாடிய பாடல்.

நான் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக மெட்டமைத்து, எழுதி, பாடி வருகிறேன். இதுவரை என்னிடமிருந்து மெட்டும் பாடல் வரிகளும் ஒரே நேரத்தில் தான் வந்தன. ஆனால், முதல் முறையாக இந்தப் பாடலுக்கு மெட்டு மட்டும் சில தினங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தோன்றியது. உடனே வாகனத்தை நிறுத்தி, இந்தப் பாடலுக்கான மெட்டை, குரல் பதிவாக பதிவு செய்து கொண்டேன். ஏனெனில், மற்ற இசையமைப்பாளர்கள் போல் இசைக் குறிப்பு எடுத்துக் கொள்ளுமளவுக்கு இசைப் பயிற்சி பெற்றவனில்லை நான். கேள்வி ஞானத்தில் மட்டுமே என்னிடமிருந்து மெட்டு வருகிறது.  இந்தப் பாடலின் மெட்டை, தத்தகாரத்தில் இந்த விழியத்தின் முதல் இருபது நொடிகள் நான் பாடியதை முதலில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, அதன்பிறகு வீட்டிற்கு வந்தபிறகு பாடல் வரிகளை நான் எழுதினேன். 

என் மகள் ரிதன்யா பொதுவாகவே நான் கேட்காமலேயே என்னை செல்லம் கொஞ்சுவாள். என்மேல் மிகவும் அன்பு கொண்ட ஒரு உன்னதமான ஆன்மா. நான் அன்பை எதிர்பார்த்த பலபேரிடமும் கிடைக்காத அன்பை நான் கேட்காமலேயே எனக்கு அன்பை அள்ளி அள்ளிக் கொடுப்பவள் என் மகள் ரிதன்யா. அதனால் தான் என்னவோ பாடல் வரிகள் மிகவும் அருமையாகவே வந்திருக்கிறன்றன. நானும் மிகவும் மகிழ்வோடு இரசித்துப் பாடினேன். நீங்களும் கேட்டுப் பாருங்கள். மகிழுங்கள். வாழ்த்துங்கள்.








என்னை என்னை என்னைத் தாலாட்டும்
வண்ண வண்ண நிலவே
கண்ணைக் கண்ணைக் கண்ணை ஏமாற்றி
மின்னும் மின்னும் அழகே

உந்தன் முகத்தைக் கண்டபொழுதில்
உற்சாகம் நெஞ்சில் வா
உந்தன் குறும்பைக் கண்டபொழுதில்
உண்டாகும் சந்தோசம் வா 

மெல்ல மெல்ல மெல்லப் பூவாகும்
முல்லை முல்லை மலரே
செல்லச் செல்லச் செல்ல மான்போலே 
துள்ளும் துள்ளும் மகளே 

எந்தனுயிரை என் கண்ணே பார்க்கும்
வரம் பெற்றேன் கண்ணே வா
எந்தன் குழந்தைப் பருவத்தை நானும்
என் கண்ணால் பார்த்தேன் வா

கொஞ்சிக் கொஞ்சிக் கொஞ்சிப் பாராட்டும் 
கொஞ்சல் கொஞ்சல் மொழியே
கெஞ்சிக் கெஞ்சிக் கெஞ்சி வாயாடும் 
வஞ்சி வஞ்சித் தமிழே

உந்தன் பிறந்தநாளில் நானும்
புதிதாய் பிறந்தேன் வா
உந்தன் சிரிப்பில் ஒவ்வொரு நாளும்
சொர்க்கத்தைக் கண்டேன் வா

என்னை என்னை என்னைத் தாலாட்டும்
வண்ண வண்ண நிலவே
கண்ணைக் கண்ணைக் கண்ணை ஏமாற்றி
மின்னும் மின்னும் அழகே

Tuesday, April 25, 2023

விஷ்ணு பிறந்தான் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/W7NWrdtdx8Y



பிறந்தநாள் வாழ்த்து 
====================

நாளை (26-04-2023) என் மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் இயற்றிய மெட்டும் மெட்டிலமைந்த பாடலும் இது.

என் மருமகனின் முழுப்பெயர் விஷ்ணு சபரீஷ். இங்கு சபரி என்பது சபரி மலை ஐயப்பனாகிய கிருஷ்ணனையே குறிக்கும்.

சிவனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் முருகன். அதேபோல் ஏற்றவர் இராவணனும் ஆவார். முருகனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் கிருஷ்ணன்.  அதேபோல், கிருஷ்ணனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் திருமால் என்ற விஷ்ணு. 

அனைவர் வீட்டிலும் வசிப்பவன், இருப்பவன் என்ற பொருளில் வீட்டினன் என்ற பெயரே வீட்னு என்று மருவி அதுவே விஷ்ணு என்றானது.





சின்ன நிலா வண்ண உலா 
போனதென்ன தம்பியுடன்
எண்ணமதில் உன்னினைவே
எங்க குல சாமி நீயே

எங்க தம்பி தங்கக் கம்பி
எங்க பலம் உன்ன நம்பி
பொங்கும் பொங்கல் தங்கு மெங்கும்
அங்க மதில் அன்பு பொங்கும்

செங்கமலம் பெத்த புள்ள
பெத்தெடுத்த முத்துப்பிள்ள
தங்கைமகன் விஷ்ணுப்பிள்ள
எங்களோட செல்லப்பிள்ள

கள்ளமில்லா உள்ளங்கொண்ட
காளை எங்க விஷ்ணுப்பிள்ள
எல்லையில்லா அன்புகொண்ட
என் தங்கை பெற்ற புள்ள

மன்னாதி மன்னனான
மருதுபாண்டி வம்சத்துல
பொன்னான சிவகங்கைச் 
சீமை பெற்ற மச்சக்காள

அப்புக்குட்டி செல்லக்குட்டி
தங்கக்கட்டி வெல்லக்கட்டி
முத்துப்பெட்டி வைரப்பெட்டி
முத்தந்தரும் கன்னுக்குட்டி 

Saturday, April 8, 2023

செறிவூட்டப் பட்ட விஷம் கலந்த அரிசி வழங்கும் (அ)நியாய விலைக்கடைகளும் திருநெல்வேலியில் நெல் வேளாண்மைக்காக நடந்த மகாபாரதப் போரின் பின்னணியும் ஒற்றை உலக ஆட்சியும் (One World Order)


இந்த விழியத்தை பார்த்து விட்டு பிறகு தொடர்ந்து இந்தப் பதிவை வாசியுங்கள்.

 


 தமிழர் உண்மை வரலாற்றைத் தெரிந்துகொண்டே தூய தமிழ் தேசியம் என்ற மூக்குக் கண்ணாடியின் வழியே பார்க்கும்போது தான், இல்லுமினாட்டி குறித்தும் உலக அரசியல் குறித்தும் தெளிவாகத் தெரிகிறது, புரிகிறது.

இல்லுமினாட்டி குறித்து ஹீலர் பாஸ்கர் சொன்னபோது கற்பனை என்று நினைத்த இல்லுமினாட்டி, உலக அரசியல் எல்லாம், இப்போது தூய தமிழ் தேசியம் தொடர்பான தொடர் தேடலுக்குப் பிறகு இல்லுமினாட்டி குறித்தும் உலக அரசியல் குறித்தும் தெளிவாகத் தெரிகிறது, புரிகிறது.

ஏனெனில் உலக அரசியலே விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய தமிழர்களை சுற்றித்தான் பழிவாங்க நடந்து கொண்டிருக்கிறது. நம் சித்தர்கள் அருளால், நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால், நாம் தொடர்ந்து பாதுகாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அரசாங்கமே தன் குடிமக்களை செறிவூட்டல் என்ற விஷம் கலந்த அரிசியை வழங்கி கொல்லப் பார்க்கிறது.

​அரசாங்கம் என்பது மக்களுக்கானது அல்ல. அது தனிப்பட்ட முதலாளிகளுக்கானது என்பதை நியாய விலைக்கடைகளில் அரிசி வாங்கி சாப்பிடும் ஏழை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏழ்மையை ஒழிப்பதற்குப் பதிலாக ஏழைகளை ஒழிக்க அரசின் பின்னால் உள்ளவர்கள் திட்டம் தீட்டி செயல்படுத்தத் துவங்கியுள்ளனர். இதுபோல் பல நாசக்காரத் திட்டங்கள் உள்ளன. 

மோடியின் பின்னாலும் ஸ்டாலினின் பின்னாலும் யூத பிராமண இல்லுமினாட்டி கும்பலே இவற்றையெல்லாம் செய்யத் தூண்டுகிறது.

இதற்கான காரணம் மகாபாரதப் போரில் தமிழரான கிருஷ்ணன் யூதச் சகுனியை கொன்றதன் பழிவாங்கல் நடவடிக்கையே.

ஏற்கனவே திருநெல்வேலியில் முதன்முதலில் நெல் விவசாயம் செய்யவேண்டி குறவர்களுக்கும் பஞ்ச பாண்டியர்களுக்கும் தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் ஆதிச்சநல்லூரில் நடந்த மகாபாரதப் போரில் கிருஷ்ணன் அணுகுண்டைப் பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தி சகுனியைக் கொன்றார்.

கிருஷ்ணனே e=mc2 என்ற சூத்திரத்தைக் கண்டறிந்தார். ஐன்ஸ்டீன் அல்ல.

 நெல்லுக்காகவும் அரிசிக்காகவும் நடந்த போரின் சகுனியின் சாவுக்குக் காரணமான கிருஷ்ணனின் வம்சாவழிகளாகிய தமிழர்களான நம்மை அதே அரிசியில் விஷம் வைத்துக் கொல்லத் திட்டம் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அநியாய விலைக்கடை அதாவது ரேஷன் கடையில் அரிசி வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

பத்து அரிசிக்கு ஒரு அரிசி செறிவூட்டப் பட்ட அரிசியாம். அதாவது விசமாம். கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் விசம்.

ஏற்கனவே, உப்பில் அயோடின் கலந்து உப்பில் உள்ள காலசியத்தை ஆவியாக வைத்து உப்பு என்ற பெயரில் விசத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் பெண்களுக்கு தைராய்ட்டு நோய் அதிகம் வருகிறது. இதுவே நாளைடைவில் புற்றுநோயாக மாறுகிறது.

எனவே, மக்களே உஷார்.

அரசாங்கத்தை நம்பாதீர்கள்.

ஸ்டாலினை புகழாதீர்கள். புத்தகத் திருவிழா நடத்தினார். மரபுக் கவிதைக்காக மு. வா. சேதுராமன் அவர்களுக்கு பத்து இலட்சம் பரிசு கொடுத்தார் என்பதற்காக ஸ்டாலினை புகழாதீர்கள். அவர் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்கிறார்.

மக்களே எச்சரிக்கை.