அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
நான் எழுதிய இப்பாடலில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு எதற்காக தோன்றியது என்ற உண்மை வரலாற்றை இப்பாடலின் இறுதியில் சொல்லியிருக்கிறேன்.
பாடலை கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். பொங்கலை, ஜல்லிக்கட்டை கொண்டாடி மகிழுங்கள்.
என்னுடைய இந்த விழியத்தின் இணைப்பை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பகிர்ந்து கொண்டு உங்கள் மகிழ்ச்சியை உலகம் முழுதும் பரப்புங்கள்.
இந்தப் பாடலை பாடிப் பதிவு செய்யும்போது மனதில் நிறைய மகிழ்ச்சி பொங்கியது. மகிழ்வான தருணமிது.
மீண்டும் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்
தை மாதம் வந்தாச்சு பொங்கலும் பொங்குது
விவசாயம் செழிக்கவே தமிழர்கள் மகிழவே
தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்
செங்கரும்பு இனிக்கவே சந்தோசம் நிலைக்கவே
கால்நடைகள் ஆடிடவே கதிரவனும் குளிர்ந்திடவே
தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்
பூர்வீகமாய் மண்பானையில் மணமணக்கும் மஞ்சள் கட்டி
தித்திக்கும் மண்ட வெல்லம் தட்டித்தட்டி சேர்த்து வச்சு
தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்
பகைவர்கள் ஒளிந்திடவே பகலவனும் ஒளிர்ந்திடவே
பச்சரிசி பொங்கிடவே பொங்கலுந்தான் தித்திக்கவே
தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்
காளைமாட்ட உழுது பழக்க காடுவயலில் ஏரும் பூட்ட
காளையைத் தான் தோழனாக்க கண்டுபிடித்த ஏறுதழுவல்
பட்டிக்காட்டில் ஜல்லிக்கட்டு எங்க ஊரில் மஞ்சுவிரட்டு
தொட்டுப்புட்டா சீருமடா தழுவிப்புட்டா வீரனடா
தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்
வெட்டி வச்ச செங்கரும்பும் அவிச்சு வச்ச பனைக்கிழங்கும்
பச்சரிசி சர்க்கரைப் பொங்கும் பரம்பரையாய் நிம்மதி தங்கும்
சர்க்கரையில்லா வெண்பொங்கல் ஆநிரைக்கோர் மாட்டுப்பொங்கல்
அக்கறையாகக் காணும்பொங்கல் அகிலமெங்கும் அதிரு மெங்கள்
தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்
தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்