Sunday, March 12, 2023

சித்தர் கிருஷ்ணன் பிறந்த ஊர் திண்டுக்கல் - திண்டுக்கல் சாரதி (2008) திரைப்படம்






சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் அவர்கள் "சித்தர் கிருஷ்ணன் பிறந்த ஊர் திண்டுக்கலுக்கு அருகில் தான்" என நிறுவினார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக இரண்டு செய்திகளை இங்கு பதிவிடுகிறேன்.

2008 ல் வெளிவந்த திரைப்படத்தின் தலைப்பு "திண்டுக்கல் சாரதி". தமிழ்நாட்டில் நாம் எப்படி ஓட்டுநர் என்று சொல்கிறோமோ அதே போல் ஈழத்தில் சாரதி என்று சொல்வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சாரதி என்ற வார்த்தை தேரோட்டியையே குறிக்கும்.

மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு தேரோட்டிய சாரதி கிருஷ்ணன்.

சற்றுமுன் DSP என்ற ஒரு திரைப்படம் பார்த்தேன். கதை நடக்கும் ஊர் திண்டுக்கல். அதில் ஒரு காட்சியில் ஒரு வசனம். மாப்பிள்ளை விநாயகம் கதாப்பாத்திரம் பேசுவது "உங்க பிருந்தாவனத்தில் என் ராதையை வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?".

கிருஷ்ணன் பிறந்த விரிந்த வனமான பிருந்தாவனம் என்பது திண்டுக்கல் தான். 

No comments: