Sunday, March 12, 2023

சித்தர் கிருஷ்ணன் பிறந்த ஊர் திண்டுக்கல் - திண்டுக்கல் சாரதி (2008) திரைப்படம்






சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் அவர்கள் "சித்தர் கிருஷ்ணன் பிறந்த ஊர் திண்டுக்கலுக்கு அருகில் தான்" என நிறுவினார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக இரண்டு செய்திகளை இங்கு பதிவிடுகிறேன்.

2008 ல் வெளிவந்த திரைப்படத்தின் தலைப்பு "திண்டுக்கல் சாரதி". தமிழ்நாட்டில் நாம் எப்படி ஓட்டுநர் என்று சொல்கிறோமோ அதே போல் ஈழத்தில் சாரதி என்று சொல்வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சாரதி என்ற வார்த்தை தேரோட்டியையே குறிக்கும்.

மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு தேரோட்டிய சாரதி கிருஷ்ணன்.

சற்றுமுன் DSP என்ற ஒரு திரைப்படம் பார்த்தேன். கதை நடக்கும் ஊர் திண்டுக்கல். அதில் ஒரு காட்சியில் ஒரு வசனம். மாப்பிள்ளை விநாயகம் கதாப்பாத்திரம் பேசுவது "உங்க பிருந்தாவனத்தில் என் ராதையை வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?".

கிருஷ்ணன் பிறந்த விரிந்த வனமான பிருந்தாவனம் என்பது திண்டுக்கல் தான். 

Friday, March 10, 2023

வாத்தி (2023) திரைப்படம் சொல்லும் சித்தர் முருகனின் உண்மை வரலாறு




நான் ஏற்கனவே எழுதிய


என்ற பதிவினை வாசித்து விட்டு தொடருங்கள்.


சற்றுமுன் "வாத்தி" திரைப்படம் பார்த்தேன். வாத்தி என்ற வார்த்தை நம்முடைய அறிவியல் விஞ்ஞானியான முருகனையே குறிக்கும்.

சித்தர் முருகன் குருகுலம் நடத்தியவர். அன்றைய குமரிக்கண்டத் தமிழர்களின் குருவாக, ஆசானாக, வாத்தியாக விளங்கியவர்.

இந்த படத்தில் முருகன் பற்றி நமக்குத் தெரியாத சில மறைமுக செய்திகள் உள்ளன.

படத்தில் வாத்தியாக நடிக்கும் கதாப்பாத்திரத்தின் பெயர் முருகனான பாலமுருகன். முருகன் உருவாக்கிய சப்த கன்னிகளில் ஒரு பெண் தெய்வம் மீனாட்சி எனும் பச்சையம்மாள். இந்தத் திரைப்படத்தில் வரும் வாத்தி என்ற கதாப்பாத்திரத்தின் காதலி மற்றும் மனைவி கதாப்பாத்திரத்தின் பெயர் மீனாட்சி.

நான் இந்தப் பதிவில் சொல்வது கற்பனையெனில், இந்தப் படத்தின் கதாநாயகனின் பெயர் பாலமுருகன் என்றும் கதாநாயகியின் பெயர் மீனாட்சி என்றும் சொல்லி வைத்தாற்போல் ஏன் வைக்க வேண்டும்?

முருகனே கூட்டல், கழித்தல் தொடங்கி sin, cos tan,  போன்ற பல கணிதக் கோட்பாடுகளை மட்டுமல்ல இயற்பியல் வேதியியல் கோட்பாடுகளையும் கண்டறிந்தார் என்பது நமக்கு ஏற்கனவே தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் மூலம் தெரிந்ததே.

மேற்சொன்னதை நிறுவும் விதமாக இப்படத்தில் வாத்தியான நம் அப்பன் முருகனான பாலமுருகன் கணிதத்தோடு சேர்த்து வேதியியல் மற்றும் இயற்பியலையும் கற்பிப்பது போல காட்டியிருக்கின்றனர்.

இப்படத்தின் இயக்குநர் தெலுங்கர். காதநாயகன் தனுஷ் தெலுங்கர், காதநாயகி மலையாளி, நடித்த பிற அனைவரும் தமிழர் அல்லாதோர்.

இதன்மூலம் தமிழர் அல்லாத பிறமொழியாளர்களுக்கு, குறிப்பாக தெலுங்கர்களுக்கு நம்முடைய தமிழர்களின் பழைய வரலாறு அனைத்தும் தமிழர்களை விட அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

ஆனால், கடைசி வரை தமிழன் தன்னுடைய உண்மை வரலாறு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது தான் வேதனை.

நம்முடைய விஞ்ஞானிகளான

சிவன்
முருகன்
இராவணன்
கும்ப கர்ணன்
இந்திரன்
கிருஷ்ணன்
விஷ்ணு

போன்ற பல விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பரசுராமனின் களப்பிரர் என்ற கலவரப் படையெடுப்பின் மூலம் முக்கால் வாசியும், முகலாயப் படையெடுப்பிலிருந்து தமிழர்களை காக்க வருகிறோம் என்று சொல்லி விஜய நகர தெலுங்கு வடுகர்கள் இங்கு வந்து மீதமுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சுவடு தெரியாமல் அழித்ததோடு நம் சித்தர்கள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் மேலை நாட்டு யூதர்கள் கண்டுபிடித்ததாக (உதாரணத்திற்கு புவியீர்ப்பு விசையை கண்டறிந்த விஷ்ணுவுக்கு பதில் அவர் பெயரை குறிக்கும் படி ஐசக் நியூட்டன் என்பது போல) பொய் வரலாறு எழுதி அதையே இன்று வரை நம் பாடப்புத்தகத்தில் புவியீர்ப்பு விசையை கண்டறிந்தவர் நம் சித்தர் விஷ்ணு என்பதற்கு பதில் ஐசக் நியூட்டன் என்பது போன்ற பொய்களையே நாம் இன்று வரை உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், நம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அழித்த பரசுராமன் போன்ற யூத பிராமண வாரிசுகளுக்கும் விஜய நகரப் பேரரசின் வாரிசுகளான தெலுங்கு வடுகர்களுக்கும் நம் உண்மை வரலாறு நன்றாகவே தெரியும். அவற்றையெல்லாம் திரைப்படங்களில் காட்டி கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Tuesday, March 7, 2023

ஆராரோ பாட்டு - என்னுடைய புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த தாலாட்டுப் பாடலும்

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/UyYgXQkoefU


சில நாட்களுக்கு முன், என் இளைய மகள் நிறைமதி தூக்கத்திலிருந்து எழுந்து கண்ணை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் அம்மாவைத் தேடினாள். புட்டிப் பாலை குடித்து விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். கடைக்குச் சென்றிருந்த அவள் அம்மாவான என் மனைவியை அழைத்து வர இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றேன். அப்போது தோன்றிய மெட்டும் பாடல் வரிகளும் இவை.

நான் மெட்டமைத்து எழுதிய தாய்மையோடு தொடர்புடைய தாலாட்டுப் பாடலிது.

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.




ஆராரோ பாடும்
தாயைத்தான் தேடும்
தாயங்கே இல்லையென்றால்
துயில் கலைந்தே வாடும்

பாலுண்ணும் போதும்
தாலாட்டே கீதம்
தாயென்ற தெய்வம் பேசும்
கொஞ்சல் மொழி வேதம்

விளையாடும் மானே
விரல் பிடித்துத் தானே
தலையாட்டி நடக்கின்ற
தித்திக்கும் தேனே

கவிபாடும் உள்ளம்
கண்டாலே துள்ளும்
புவிமேலே அழகாக
பூப்பூக்கும் செல்லம் 

என்னோட பாட்டு
இளந்தென்றல் காற்று
கண்மூடித் தூங்கம்மா
காதோரம் கேட்டு 

Monday, February 27, 2023

பெண்ணே நீ யாரடி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த காதல் பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/qxPI1-zlTmE


வரும் மார்ச் 2 ம் தேதி (வியாழக்கிழமை) என் மனைவி ஆனந்தியின் பிறந்தநாள். என் கற்பனையில் உருவான இந்த புத்தம் புது மெட்டும் மெட்டுக்கு அமைந்த காதல் பாடலும் என் மனைவியின் பிறந்தநாளுக்காய் நான் அவளுக்கு கொடுக்கும் அன்பு பரிசு.

இன்னும் சில தினங்களுக்குள் இதே பாடலின் பெண் ஆணைப் பார்த்து பாடுவது போலான பதிவினை, விழியத்தினை வெளியிடுவேன். நன்றி.





உணர்வில் கலந்து உயிரில் நிறைந்த
எனது சுவாசம் நீயடி
உறக்கம் நுழைந்து கனவில் கலந்த 
காதல் கவிதை நீயடி

பெண்ணே நீ யாரடி
எந்தன் வானும் மண்ணும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வாழ்வும் சாவும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் கவியும் இசையும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் உயிரும் மூச்சும்

மனதில் எங்கும் மகிழ்வாய் நிறைந்த
எந்தன் தாயும் நீயடி
எனது உடலின் உள்ளே ஓடும்
இரத்த நாளம் நீயடி

பெண்ணே நீ யாரடி
எந்தன் இரவும் பகலும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வலியும் மருந்தும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வெயிலும் மழையும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் அறிவும் மடமும்

அழகு மலராய் அருகில் நிற்கும்
எந்தன் அழகு தேவதை
விழிகள் நனைத்து விரலும் கோர்த்த
எந்தன் நெஞ்சின் மாமழை

பெண்ணே நீ யாரடி
எந்தன் விருப்பும் வெறுப்பும் 
பெண்ணே நீ யாரடி
எந்தன் நீரும் நெருப்பும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் முதலும் முடிவும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் பேச்சின் மௌனம் 

Sunday, February 12, 2023

அத்த மகளே ( என் கற்பனையில் உருவான புத்தம் புது கிராமிய மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/DRE0QoPogWM


தினம் தினம் அன்பு செலுத்தத் தேவையான அன்பான, அழகான, அமைதியான மனமிருந்தால், காதலர் தினம் என்று தனியாக நாம் கொண்டாட வேண்டியதில்லை.

என் கற்பனையில் உருவான இந்த மெட்டுக்கும் வரிகளுக்கும் நானும் என் மனைவியும் சேர்ந்து பாடிய பாடல்...

சதுரகிரி மலையடிவாரமான சாப்டூர் கிராமத்தைச் சேர்ந்தவள் என் மனைவி ஆனந்தி. அவள் சிறுவயது புகைப்படத்தைத் தான், இந்தக் காணொளியின் முதலாக இணைத்துள்ளேன். 





ஆண்
அத்த மகளே என்மேல்
ஆசவச்ச பெண்மயிலே
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கவச்ச உண்மையிலே

பெண்
அத்த மகனே என்மேல்
ஆசவச்ச மச்சானே 
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கும்படி வச்சானே 

ஆண் 
காலொடிஞ்சு நா கெடக்க
கல்லொடைக்க போன புள்ள
நாளுமொரு யுகமாச்சு
நானழுது குளமாச்சு
( அத்த மகளே )

ஆண்
நானுமுன்னப் பிரிஞ்சாலே
உசுருங்கூட என்னதில்ல 
ஆணுங்கொண்ட அன்பு மட்டும்
ஆயுசுக்கும் போவதில்ல
( அத்த மகளே )

ஆண்
பசியா நானிருந்தா
பதறிச்சோறு ஆக்கிடுவ
பக்கம்வந்து பக்கம்வந்து
பக்குவமா ஊட்டிடுவ
( அத்த மகளே )

ஆண்
சோறுதண்ணி சாப்பிடத்தா
சோர்வின்றி நீ உழைச்ச
தேருபோல எம் மனசில்
உசந்து நின்னு நீ சிரிச்ச
( அத்த மகளே )

ஆண்
ஆத்தோரம் தோப்போரம் - நா
நடந்து போகயிலும்
ஒன் நெனப்புத்தானே புள்ள
கட்டயிலே வேகயிலும் 
( அத்த மகளே )

ஆண்
அத்த மகளே என்மேல்
ஆசவச்ச பெண்மயிலே
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கவச்ச உண்மையிலே

பெண்
அத்த மகனே என்மேல்
ஆசவச்ச மச்சானே 
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கும்படி வச்சானே

Saturday, February 4, 2023

வேல்முருகன் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

முருகனுக்கு அறமான் என்ற பெயரும் உண்டு. அறம் என்பதற்கு உளத்தூய்மை என்றே பொருள். முருகன் அவ்வாறே உளத்தூய்மையோடு தமிழ் மக்களுக்காகவே குமரிக்கண்டத்தில் வாழ்ந்தார். 

குறவோன் என்பது முருகனின் முன்னோடியான சித்தர் சிவனையே குறித்தாலும் சிவனின் தாசனான வானாராய்ச்சி சித்தரான இராவணனையும் சேர்த்தே குறிக்கிறது. இந்த குறவோன் என்ற வார்த்தையே ஆங்கிலத்தில் crown ( கிரௌன் - தலையில் அணியும் கிரீடம், மகுடம் ) என்றாகி கொரோனா ( corono ) என்றானது. இதை விரிவாக இன்னொரு பதிவில் விரிவாக பேசலாம். 

அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்.


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/aVFq7alAV_0





கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
பால தாண்டாயுத பாணிக்கு அரோகரா
தமிழ்க்கடவுளுக்கு அரோகரா
அறிவியல் விஞ்ஞானிக்கு அரோகரா
அரோகரா அரோகரா 

அறமானே முருகனே
அறமானே முருகனே
அன்பின் வடிவோனே அழகிய தமிழ் மகனே
அன்பின் வடிவோனே அழகிய தமிழ் மகனே
முன்பாய் வாழ்ந்தோனே முதல்வனே மூத்தோனே 
அறமானே முருகனே

மறவேனே மறவனே
மறவேனே மறவனே
சித்தம் தெளிந்திட சித்தன் உனையேற்றும் 
கத்தும் குயிலென நித்தமும் ஒரு பாட்டும்
ரத்தம் உறைந்திட புத்தம் புது தோற்றம்
மறவேனே மறவனே
மறவேனே மறவனே

குறவோனே குறவனே 
மருத்துவம் செய்தோனே மகத்துவ மானோனே 
கருவளக் கடவுளாய் கதிர்காமம் நின்றவனே 
குறவோனே குறவனே
குறவோனே குறவனே

முருகனே அழகனே முத்தமிழ் அறிஞனே 
கருணையின் உருவமே இடும்பனே கடம்பனே
எந்தையே சிந்தையே முந்தைய கந்தனே 
விந்தையே எந்தன் சிந்தையில் நின்றோய் 

Saturday, January 14, 2023

தமிழர் திருநாள் ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/vFnk9EZvZbY


அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

நான் எழுதிய இப்பாடலில் ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டு எதற்காக தோன்றியது என்ற உண்மை வரலாற்றை இப்பாடலின் இறுதியில் சொல்லியிருக்கிறேன். 

பாடலை கேட்டு மகிழுங்கள். பாடி மகிழுங்கள். பொங்கலை, ஜல்லிக்கட்டை கொண்டாடி மகிழுங்கள். 

என்னுடைய இந்த விழியத்தின் இணைப்பை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பகிர்ந்து கொண்டு உங்கள் மகிழ்ச்சியை உலகம் முழுதும் பரப்புங்கள். 

இந்தப் பாடலை பாடிப் பதிவு செய்யும்போது மனதில் நிறைய மகிழ்ச்சி பொங்கியது. மகிழ்வான தருணமிது.

மீண்டும் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.






தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

தை மாதம் வந்தாச்சு பொங்கலும் பொங்குது
விவசாயம் செழிக்கவே தமிழர்கள் மகிழவே

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

செங்கரும்பு இனிக்கவே சந்தோசம் நிலைக்கவே
கால்நடைகள் ஆடிடவே கதிரவனும் குளிர்ந்திடவே 

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

பூர்வீகமாய் மண்பானையில் மணமணக்கும் மஞ்சள் கட்டி 
தித்திக்கும் மண்ட வெல்லம் தட்டித்தட்டி சேர்த்து வச்சு 

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

பகைவர்கள் ஒளிந்திடவே பகலவனும் ஒளிர்ந்திடவே
பச்சரிசி பொங்கிடவே பொங்கலுந்தான் தித்திக்கவே

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

காளைமாட்ட உழுது பழக்க காடுவயலில் ஏரும் பூட்ட
காளையைத் தான் தோழனாக்க கண்டுபிடித்த ஏறுதழுவல் 
பட்டிக்காட்டில் ஜல்லிக்கட்டு எங்க ஊரில் மஞ்சுவிரட்டு
தொட்டுப்புட்டா சீருமடா தழுவிப்புட்டா வீரனடா

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

வெட்டி வச்ச செங்கரும்பும் அவிச்சு வச்ச பனைக்கிழங்கும்
பச்சரிசி சர்க்கரைப் பொங்கும் பரம்பரையாய் நிம்மதி தங்கும்
சர்க்கரையில்லா வெண்பொங்கல் ஆநிரைக்கோர் மாட்டுப்பொங்கல் 
அக்கறையாகக் காணும்பொங்கல் அகிலமெங்கும் அதிரு மெங்கள் 

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

தைப் பொங்கல் தைப் பொங்கல்
ஏ ஏ தைப் பொங்கல் தைப் பொங்கல்

Sunday, December 25, 2022

கீழடிக்கு இணையாக நான் பிறந்த ஊர் முனைவென்றி. நிலவுடமை ஆதிக்கத்திற்கெதிராகச் சிவந்து சினந்து எழுந்த ஊர். புரட்சிக்கு வகுப்பெடுக்கும் ஊர் - அழகு ராட்சசி கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதிய இளையான்குடி முதிய கவிஞர்


 
















என் சிறு வயதில் என் தாத்தாவிடம் (அம்மாவின் அப்பா) என் ஊர் முனைவென்றி யின் பெயர்க்காரணம் குறித்து கேட்டேன். அவர் இரு விதமான பதில்களை பெயர்க்காரணங்களாக கூறினார்.

1. முனைவண்டி - என் ஊர் வழியே பழங்காலத்தில் மாட்டு வண்டிகள் வரிசையாக செல்லும்போது என் ஊர் வரும்போது ஒரு வண்டியின் அச்சாணி உடைந்ததாம். அதனால் முனை உடைந்த வண்டி முனைவண்டி என்று பெயர் சூட்டப்பட்டு முனைவென்றி யானது.

2. பழங்காலத்தில் ஒரு போர் நடந்து வெற்றி பெற்ற முனை இந்த ஊர். ஆதலால் இந்த ஊருக்கு வெற்றி முனை என்றாகி முனைவெற்றி -> முனைவென்றி என்றானது.

கடந்த டிசம்பர் 8ம் தேதி, இளையான்குடியிலிருந்து கவிஞர். ஹிதாயத்துல்லா என்ற முதியவரிடமிருந்து என் முதல் கவிதை நூலான "அழகு இராட்சசி" க்கு விமர்சன கடிதம் வந்தது.

அந்த விமர்சனத்தில் என் ஊர் முனைவென்றியை பற்றி சில வரிகள் இப்படி குறிப்பிட்டிருந்தார்.

தன பெயரிலேயே வெற்றியைப் பெற்றிருக்கின்ற முனைவென்றி கிராமம் ஒரு கீர்த்தியுள்ள கிராமம். நிலவுடமை ஆதிக்கத்திற்கெதிராகச் சிவந்து சினந்து எழுந்த ஊர். புரட்சிக்கு வகுப்பெடுக்கும் ஊர்.

ஆக, என் ஊர் முனைவென்றியில் ஏதோவொரு போர் நடந்திருக்கிறது. அந்தப் போரில் வெற்றி பெற்றதால் வெற்றி முனை -> முனைவெற்றி -> முனைவென்றி என்றாகியிருக்கிறது. ஆக, என் தாத்தா சொன்ன இரண்டாவது காரணப்பெயர் தான் சரி. அவர் ஏதோவொரு போர் நடந்ததாகச் சொன்னார். ஆனால் என்ன போர் நடந்தது எதனால் நடந்தது என்பது சொல்லவில்லை. 

இப்போது இந்த இளையான்குடி கவிஞர் சொன்னபிறகு அந்தப் போர் நிலவுடைமைச் சமூகத்திற்கு எதிராக நடந்த போர் என்பது உறுதியாகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய பதிவு.

நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு.  செய்தி. - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/10/3200.html

சில மாதங்களில் என் ஊரில் முதுமக்கள் தாழியை கண்டறிந்த ஐயா ராசேந்திரன் என்ற தொல்லியல் துறை சார்ந்த பேராசிரியருடன் தொடர்பு கொண்டேன். அவர் அனுப்பி வைத்த தரவுகளை சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்ச்சாலை தொல்லியல் துறையில் நேரில் சென்று சமர்ப்பித்தேன். சில மாதங்களில் எழும்பூரிலிருந்து அவருக்கு அழைப்பு வந்து அதில் "அக்கறை வரிசைப்படி நீங்கள் கொடுத்த முனைவென்றி மற்றும் இன்னொரு ஊரிலும் தொல்லியல் துறை சார்பில் அரசாங்கத்திலிருந்து ஆராய்ச்சி துவங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருந்தாக அவர் என்னிடம் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், முனைவென்றியை குறித்து ஒரு ஆய்வுநூல் எழுதி முடிக்கும் தருவாயில் இருப்பதாகவும் இன்னும் சில வாரங்களில் அரபு நாடான ஷார்ஜாவில் முனைவென்றி குறித்து பேசப்போகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை (26-12-2022) இளையான்குடிக்கு பயணமாகிறேன் அந்தக் கவிஞர் ஹிதாயத்துல்லா என்ற முதியவரை சந்த்திக்க... என் ஊரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள...

இன்னுமொரு செய்தி.

என் அப்பாவிடம் சில தினங்களுக்கு முன் என் அப்பத்தா வீரம்மாள் என்றாய் சிட்டுவைப் பற்றி (என் அப்பாவின் அம்மா) கேட்டேன்.

"என் அப்பத்தாவின் சொந்த ஊர் முனைவென்றி. என் அப்பத்தாவின் அம்மா அப்பா தங்களின் சிறு வயதிலேயே முனைவென்றியிலிருந்து பர்மா சென்று அங்கு தான் என் அப்பத்தா பிறந்ததாகவும் என் அப்பத்தாவின் அப்பா அம்மா பர்மாவிலேயே நிலங்கள் வாங்கி அந்த நிலங்களில் விவசாய வேலை செய்ய அந்த நாட்டு மக்களை பணியாட்களாக அமர்த்திருந்தனர். அந்த காலத்திலேயே பர்மா வேறு ஒரு நாட்டில் சொந்த வீடு மற்றும் நிலங்களோடு விவாசாயப் பணியாளர்களை நியமித்து பெரும் செல்வந்தர்களாக நம் முன்னோர்கள் பர்மாவில் வாழ்ந்து வந்தது சாதாரண விஷயமல்ல. ஆனால், பர்மாவில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பத்தா போன்ற தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களையும் பிறநாட்டு மக்களையும் பார்மா நாடு விரட்டி விட்டதாகவும் அங்கிருந்து என் அப்பத்தா கட்டிய துணியோடு மீண்டும் முனைவென்றிக்குத் திரும்பியதாவும் இங்கு தன் மாமா முறையான கமுதிக்கு அருகிலுள்ள நீராவிக் கரிசல்குளம் என்ற ஊரில் வசித்த என் ஐயா தர்மலிங்கம் சேர்வை (என் அப்பாவின் அப்பா) யை திருமணம் செய்து கொண்டாள்." என அப்பா தெரிவித்தார்.

இன்னும் சில தினங்கள் என் ஊரான முனைவென்றியில் தான் இருப்பேன். என் அப்பத்தாவைப் பற்றியும் என் ஊரைப் பற்றியும் இன்னும் நிறைய செய்திகளை சேகரித்து அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.

நன்றி.

Friday, November 25, 2022

தெலுங்கு ஆரிய திராவிட கருணாநிதி மறைத்த உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து

தெலுங்கு ஆரிய திராவிட கருணாநிதி மறைத்த உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து - https://youtu.be/4QNlQAGzOm0

கருணாநிதியால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரிகள் திருத்தப்பட்டு (உதாரணத்திற்கு தமிழர்நல் திருநாடு என்பதற்கு பதில் திராவிட நல் திருநாடு ), வரிகள் நீக்கப்பட்டு ( ஆரியம் போல் உலக வழக்கொழிந்து ) மீதமுள்ள வரிகள் தான் நம் பாடப் புத்தகத்தில் உள்ளன. இந்த பாடப் புத்தகங்களை உருவாக்குவபர்கள் திராவிட சித்தாந்தத்தை நல்லது என்று நம்பி ஏற்றுக் கொண்டவர்களே. என் ஆறாம் வகுப்பு ஆசிரியர் எனக்கு சிறுவயதில் தலைவர் பிராபாகரனை பற்றி நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார். தினமும் இரவு 9.15 முதல் 9.30 வரை வானொலி சிற்றலையில் (Short wave) BBC லண்டனிலிருந்து விடுதலை புலிகள் தொடர்பான செய்திகள் ஒலி பரப்பாவதாக சொன்னார். ( சில வருடங்களுக்கு முன்பு அந்த ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டது ). அவர் சொன்னதிலிருந்து வானொலி என் நண்பனாகிப் போனது. 

அன்று என் ஆசிரியர் விதைத்த விதை இன்று ஆலமரமாக என்னுள் வளர்ந்து நிற்கிறது.

எனவே, இதை படிக்கும் ஆசிரியர்கள் உங்கள் மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்தும் உண்மையல்ல என்ற உண்மையை சொல்லிக் கொடுங்கள்.

மேலும், சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 என்ற பெயரில் தமிழர் பெயரில் உள்ள தெருப்பெயர்கள் அழிக்கப்பட்டு தெலுங்கர்கள் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

எனவே, தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள். உங்கள் குல தெய்வத்தை தேடுங்கள். உங்கள் குடிப்பட்டத்தை மறக்காதீர்கள்.

தமிழர் என்ற நம்மினம் தமிழ் நாட்டில் நம் கண்முன்னே அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

Thursday, November 3, 2022

👉 துர்க்கை எனும் விபச்சாரக் கடவுளும் (Sex worker) நவ ராத்திரி எனும் இழிவான பண்டிகையும் கலப்பிரர் படையெடுப்பும்




துர்க்கை என்ற இந்து மதக் கடவுள் விபச்சாரி தான் என்று  2014 ல் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டதாம். அந்த துண்டறிக்கையை இந்திய பாராளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அப்போதைய அமைச்சர் ஸ்மிதி இராணி படித்துக் கான்பித்தார்.

துர்க்கை ஒரு விபச்சாரி தான் என்பதற்கான ஆதாரம் இந்தக் காணொளி (video). இதனை முழுமையாக பாருங்கள். உண்மை புரியும்.

துர்க்கை என்ற விபச்சாரி மைசூர் அரசனான மகிசாசுரன் என்ற தமிழ் அரசனை ஏமாற்றி ஒன்பது நாட்கள் உடலுறவு கொண்டு பத்தாவது நாளில் மைசூர் அரசனின் குஞ்சை அறுத்துக் கொன்றாள் இந்த விபச்சாரி துர்க்கை. இதன் பிறகு தான் கர்நாடக மைசூர் தமிழர்களான கவுண்டர்களை அதாவது கவுடா, கவுடர்களை (உதாரணத்திற்கு தேவகவுடா, கவுடா என்பது குடிப்பெயர்) கவுண்டர் என்ற தமிழ்க்குடிப் பெயரில் உள்ள ண் ன்னை நீக்கி கவுடர் கவுடா வாக்கி துர்க்கையின் கணவனான பரசுராமன்  கவுடர்களை அழைத்துக் கொண்டு மதுரைக்கு படையெடுத்து(தமிழர்களை வைத்தே தமிழர்களை அழித்த திட்டம்) அம்மை நோயை பரப்பி 10000 தமிழ் சித்தர்களை அழித்து இந்து மதம் எனும் இழிவான மதம் உருவானது என்பது மறைக்கப்பட்ட உண்மை வரலாறு.