Tuesday, April 25, 2023

விஷ்ணு பிறந்தான் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/W7NWrdtdx8Y



பிறந்தநாள் வாழ்த்து 
====================

நாளை (26-04-2023) என் மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் இயற்றிய மெட்டும் மெட்டிலமைந்த பாடலும் இது.

என் மருமகனின் முழுப்பெயர் விஷ்ணு சபரீஷ். இங்கு சபரி என்பது சபரி மலை ஐயப்பனாகிய கிருஷ்ணனையே குறிக்கும்.

சிவனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் முருகன். அதேபோல் ஏற்றவர் இராவணனும் ஆவார். முருகனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் கிருஷ்ணன்.  அதேபோல், கிருஷ்ணனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் திருமால் என்ற விஷ்ணு. 

அனைவர் வீட்டிலும் வசிப்பவன், இருப்பவன் என்ற பொருளில் வீட்டினன் என்ற பெயரே வீட்னு என்று மருவி அதுவே விஷ்ணு என்றானது.





சின்ன நிலா வண்ண உலா 
போனதென்ன தம்பியுடன்
எண்ணமதில் உன்னினைவே
எங்க குல சாமி நீயே

எங்க தம்பி தங்கக் கம்பி
எங்க பலம் உன்ன நம்பி
பொங்கும் பொங்கல் தங்கு மெங்கும்
அங்க மதில் அன்பு பொங்கும்

செங்கமலம் பெத்த புள்ள
பெத்தெடுத்த முத்துப்பிள்ள
தங்கைமகன் விஷ்ணுப்பிள்ள
எங்களோட செல்லப்பிள்ள

கள்ளமில்லா உள்ளங்கொண்ட
காளை எங்க விஷ்ணுப்பிள்ள
எல்லையில்லா அன்புகொண்ட
என் தங்கை பெற்ற புள்ள

மன்னாதி மன்னனான
மருதுபாண்டி வம்சத்துல
பொன்னான சிவகங்கைச் 
சீமை பெற்ற மச்சக்காள

அப்புக்குட்டி செல்லக்குட்டி
தங்கக்கட்டி வெல்லக்கட்டி
முத்துப்பெட்டி வைரப்பெட்டி
முத்தந்தரும் கன்னுக்குட்டி 

Saturday, April 8, 2023

செறிவூட்டப் பட்ட விஷம் கலந்த அரிசி வழங்கும் (அ)நியாய விலைக்கடைகளும் திருநெல்வேலியில் நெல் வேளாண்மைக்காக நடந்த மகாபாரதப் போரின் பின்னணியும் ஒற்றை உலக ஆட்சியும் (One World Order)


இந்த விழியத்தை பார்த்து விட்டு பிறகு தொடர்ந்து இந்தப் பதிவை வாசியுங்கள்.

 


 தமிழர் உண்மை வரலாற்றைத் தெரிந்துகொண்டே தூய தமிழ் தேசியம் என்ற மூக்குக் கண்ணாடியின் வழியே பார்க்கும்போது தான், இல்லுமினாட்டி குறித்தும் உலக அரசியல் குறித்தும் தெளிவாகத் தெரிகிறது, புரிகிறது.

இல்லுமினாட்டி குறித்து ஹீலர் பாஸ்கர் சொன்னபோது கற்பனை என்று நினைத்த இல்லுமினாட்டி, உலக அரசியல் எல்லாம், இப்போது தூய தமிழ் தேசியம் தொடர்பான தொடர் தேடலுக்குப் பிறகு இல்லுமினாட்டி குறித்தும் உலக அரசியல் குறித்தும் தெளிவாகத் தெரிகிறது, புரிகிறது.

ஏனெனில் உலக அரசியலே விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய தமிழர்களை சுற்றித்தான் பழிவாங்க நடந்து கொண்டிருக்கிறது. நம் சித்தர்கள் அருளால், நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால், நாம் தொடர்ந்து பாதுகாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அரசாங்கமே தன் குடிமக்களை செறிவூட்டல் என்ற விஷம் கலந்த அரிசியை வழங்கி கொல்லப் பார்க்கிறது.

​அரசாங்கம் என்பது மக்களுக்கானது அல்ல. அது தனிப்பட்ட முதலாளிகளுக்கானது என்பதை நியாய விலைக்கடைகளில் அரிசி வாங்கி சாப்பிடும் ஏழை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏழ்மையை ஒழிப்பதற்குப் பதிலாக ஏழைகளை ஒழிக்க அரசின் பின்னால் உள்ளவர்கள் திட்டம் தீட்டி செயல்படுத்தத் துவங்கியுள்ளனர். இதுபோல் பல நாசக்காரத் திட்டங்கள் உள்ளன. 

மோடியின் பின்னாலும் ஸ்டாலினின் பின்னாலும் யூத பிராமண இல்லுமினாட்டி கும்பலே இவற்றையெல்லாம் செய்யத் தூண்டுகிறது.

இதற்கான காரணம் மகாபாரதப் போரில் தமிழரான கிருஷ்ணன் யூதச் சகுனியை கொன்றதன் பழிவாங்கல் நடவடிக்கையே.

ஏற்கனவே திருநெல்வேலியில் முதன்முதலில் நெல் விவசாயம் செய்யவேண்டி குறவர்களுக்கும் பஞ்ச பாண்டியர்களுக்கும் தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் ஆதிச்சநல்லூரில் நடந்த மகாபாரதப் போரில் கிருஷ்ணன் அணுகுண்டைப் பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தி சகுனியைக் கொன்றார்.

கிருஷ்ணனே e=mc2 என்ற சூத்திரத்தைக் கண்டறிந்தார். ஐன்ஸ்டீன் அல்ல.

 நெல்லுக்காகவும் அரிசிக்காகவும் நடந்த போரின் சகுனியின் சாவுக்குக் காரணமான கிருஷ்ணனின் வம்சாவழிகளாகிய தமிழர்களான நம்மை அதே அரிசியில் விஷம் வைத்துக் கொல்லத் திட்டம் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அநியாய விலைக்கடை அதாவது ரேஷன் கடையில் அரிசி வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

பத்து அரிசிக்கு ஒரு அரிசி செறிவூட்டப் பட்ட அரிசியாம். அதாவது விசமாம். கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் விசம்.

ஏற்கனவே, உப்பில் அயோடின் கலந்து உப்பில் உள்ள காலசியத்தை ஆவியாக வைத்து உப்பு என்ற பெயரில் விசத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் பெண்களுக்கு தைராய்ட்டு நோய் அதிகம் வருகிறது. இதுவே நாளைடைவில் புற்றுநோயாக மாறுகிறது.

எனவே, மக்களே உஷார்.

அரசாங்கத்தை நம்பாதீர்கள்.

ஸ்டாலினை புகழாதீர்கள். புத்தகத் திருவிழா நடத்தினார். மரபுக் கவிதைக்காக மு. வா. சேதுராமன் அவர்களுக்கு பத்து இலட்சம் பரிசு கொடுத்தார் என்பதற்காக ஸ்டாலினை புகழாதீர்கள். அவர் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்கிறார்.

மக்களே எச்சரிக்கை.

Monday, March 20, 2023

தங்கச்சிக்கு பாட்டு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtu.be/JzdcgdV1xiI



பிறந்தநாள் வாழ்த்து
====================

வரும் 24, மார்ச் அன்று என் தங்கை சோபனாவின் பிறந்தநாள்.

வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் கணவர் நே. சுரேந்தர், மகன் விஷ்ணு, மகள் பிரகதி, அண்ணன் முனைவென்றி நா. வேல்முருகன், அண்ணி ஆனந்தி, மறுமகள்கள் ரிதன்யா, நிறைமதி, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்.
------

என் சிறுவயதில் என் அம்மா களையெடுக்க, நாத்து நட அல்லது வெளியூருக்கு செல்லுவாள். செல்லும்போது "சண்டை போடாமல் இருங்கள்" என்று சொல்லி விட்டுப் போவாள்.

அவள் போனபிறகு நான் என் தங்கையோடு சண்டை போட்டது, விவரம் தெரியாமல் அவளை அடித்தது என ஏற்கனவே 


என்ற கவிதையை என் தங்கைக்காக 2005 ல் எழுதியிருந்தேன். 

2004 ல் நான் கவிதை எழுதத் துவங்கிய பிறகே, நான் என் தங்கையை எவ்வளவு கொடுமைப் படுத்தியிருக்கிறேன். அவள் என்னை விட வயதில் இரண்டு வயது இளையவள் என்றாலும் என்னை விட மிகவும் மனப் பக்குவத்தோடு அந்த குழந்தை வயதில் நடந்து கொண்டாள் என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாகத் தான் உள்ளது.

என் தங்கை ஒரு உன்னதமான ஆன்மா. 

2005 ல் ஒருநாள் 


என  மேற்சொன்ன கவிதையை நாட்குறிப்பேடு (diary) போன்ற ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்தேன். நான் ஏதோ எழுதியிருக்கிறேன் என்பதை தூரத்தில் இருந்து அவள் பார்த்து விட்டு, நான் தூங்கிய பிறகு, அந்த குறிப்பேட்டை எடுத்துப் படித்து விட்டு காலையில் என்னிடம் அந்த பக்கத்தைக் காட்டி என்னிடம் கேட்டாள்.

"நீ சிறுவயதில் என்னை விட மனப்பக்குவத்தோடு நடந்து கொண்டாய். ஆனால், நான் கடந்த சில வருடங்கள் வரை இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உன்னிடம் நடந்து கொண்டதை நினைத்து வருத்தமாக இருந்தது. ஆனால், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறேன். அதன் விளைவாகத் தான் இந்த கவிதை என்னிடமிருந்து பிறந்திருக்கிறது" என்றேன்.

என் தங்கை "என்னிடம் பாசம் காட்டாத ஒருவன் எனக்கு அண்ணனாகப் பிறந்து விட்டானே என கடந்த சில வருடங்களாக வருத்தப் பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது அந்த வருத்தமில்லை அண்ணே" என்று கண்ணீரோடு சொன்னாள்.

இன்று, என் முதல் மகள் ரிதன்யா மற்றும் என் இரண்டாவது மகள் நிறைமதி முகங்களில் என் அம்மா, என் தங்கை, என் அக்கா, என்  மனைவி மற்றும் என் வாழ்நாளில் நான் பாசம் கொண்டு நேசித்து வியந்த உன்னத ஆன்மாக்களின் முகங்களை பார்த்து மகிழ்கிறேன். என் மகள்கள் செய்யும் குறும்புகளை பார்த்து இரசிக்கும்போதும், என் மகள்கள் இருவரையும் பார்த்துப் பார்த்து பணிவிடைகள் செய்து வளர்க்கும்போதும் என் மகள்களை தூக்கிக் கொஞ்சும்போதும் என் அம்மா, என் தங்கை, என் அக்கா, என்  மனைவி மற்றும் என் வாழ்நாளில் நான் பாசம் கொண்டு நேசித்து வியந்த உன்னத ஆன்மாக்களின்  நினைவுகளே நீங்காமல் என்னுள்  நீக்கமற நிறைந்திருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளாக என் மூத்த மகள் ரிதன்யாவோடும் கடந்த மூன்றாண்டுகளாக என் இளைய மகள் நிறைமதியோடும் எப்போதும் பிரியாமல் இருப்பதால், அவர்கள் அன்பில் என் கடந்த கால வாழ்வின் கண்ணீர் வராத துக்கங்கள் எல்லாம் கடந்த ஐந்தாண்டுகளில் கண்ணீரோடு கரைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. நான் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்காலத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.







அன்புத் தங்க செல்லத் தங்க
என்றென்றும் தங்கமங்க
வண்ணவண்ணப் பூமுடிச்சு
வற்றாத ஜீவ கங்க

சின்னப் புள்ள சண்டையெல்லாம்
கண்ணுக்குள்ள நிக்குதிங்க
உன்னப்போல பாசங்கொண்ட
உன்னதமே சொக்குதிங்க

ஒழுங்கா படிங்கன்னு
அம்மா சொல்லிட்டு
களையெடுக்க நாத்து நட
போனபின்னே எங்களுக்குள் 

என் சின்ன வயசுல
சண்ட  நடக்குமே
அத துவக்கி வைப்பதும்
நான்தான் நான்தான்

பிச்சைக்காரன் வேசம் போட்டு
கண்ணுங்கூட தெரியாதுன்னு
பொய் சொல்லி சாப்பாட்டையெல்லாம்
பறிச்சுப் பறிச்சுத் தின்னுவேனே 

ஏப்பம் விட்டதும்
மறு சண்டை நடக்குமே
அடிச்சுக் கொஞ்சமும்
வேசம் போட்டு மீதியும்

சாப்பாட்ட மட்டுமில்ல
தின்பண்டம் எல்லாத்தையும்
சண்டை போட்டும் வேசம் போட்டும்
பறிச்சுப் பறிச்சுத் தின்னுவேனே

அழுத தங்கச்சி
அம்மா வந்ததும்
சண்டை நடந்தத
சொல்லாம மறைச்சிடுவா

உன்ன நெனைக்கயில்
கண்ணோரம் கண்ணீர் வரும்
என்ன நெனைக்கயில்
என் மீதே கோபம் வரும் 

அன்புத் தங்க செல்லத் தங்க
என்றென்றும் தங்கமங்க
வண்ணவண்ணப் பூமுடிச்சு
வற்றாத ஜீவ கங்க

சின்னப் புள்ள சண்டையெல்லாம்
கண்ணுக்குள்ள நிக்குதிங்க
உன்னப்போல பாசங்கொண்ட
உன்னதமே சொக்குதிங்க

Tuesday, March 14, 2023

இராமாயணம் என்ற பொய் புராணமும் தமிழர்களின் நிலம் காத்த சித்தர் இராவணன் என்ற தமிழர்களின் குல தெய்வமும் நவீன இராவணன் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரனும்...








தமிழர்களை உண்மையிலேயே பாதுகாக்க வந்தவன் இராவணன். உண்மையிலேயே தமிழர்களை அழிக்க வந்தவன் யூதனான இராமன்.

முருகனின் இன்னொரு பெயர் அறமான். இந்த அறமானை

அ வை நீக்கி விட்டு றமான் என்பதனை ரமன் -> ராமன் என்று மாற்றி தமிழர்களை அழிக்க வந்த யூதனுக்கு ராமன் என்று பெயரிட்டு அவனை கடவுளும் ஆக்கி விட்டனர் யூத பிராமணர்கள்.

உண்மையில் நடந்தது இராவணீயப் போர். ஆனால் இராமாயணப் போர் என்று மாற்றப் பட்டுள்ளது.

போரில் கொல்லப்பட்டவன் இராமன். கொன்றவர்கள் இராவணனும் அவன் மகன் இந்திரனும்.

அந்தப் போரில் இந்திரன் துப்பாக்கியைப் பயன்படுத்தித் தான் ராமனை கழுத்தில் சுட்டார்.

இந்திரன் லெகிமம் சக்தியை பயன்படுத்தி ஆகாயத்தில் மேலெழும்பி அங்கிருந்து இராமனை துப்பாக்கியால் சுட்டார்.

அன்றே தமிழர்களிடம் துப்பாக்கி இருந்திருக்கிறது. இராமன் தன் கழுத்தில் குண்டடி பட்டு இறந்தான்.

அதனால் தான் எம். ஜி. இராமச்சந்திரனும் அதே போல் கழுத்தில் குண்டடி பட்டார்.

வரலாறு repeat... மறைமுகமாக.

இலக்கியங்களில் நிறைய இடைச் செருகல்கள் உள்ளன.

உதாரணத்திற்கு, கம்பன் எழுதிய இராமாயணம் என்பது துரோகியான, கோழையான இராமனை வீரனாகவும், வீரனான, ஒழுக்க சீலனான இராவணன் தோற்றதாகவும் சித்தரிக்கப் பட்டதாக உள்ளது.

சீதை என்பது தமிழர்களின் நிலமான தமிழ்நாடு தான். குறிப்பாக, ஊட்டி தான். இந்த ஊட்டி என்ற சீதையை அபகரிக்கத்தான் இராமன் இங்கு வந்தான். இராமன் என்ற யூத எதிரியைக் கொன்று இராவணன் தமிழ் நிலங்களை குறிப்பாக ஊட்டியை காப்பாற்றினார்.

வெளிநாட்டுக் காரர்கள் சொல்லும் ஏதேன் தோட்டம் என்பது குமரிக்கண்டம் தான். அதாவது குமரிக்கண்டத்தின் எச்சமான தமிழ்நாடும் ஈழமும் தான்.

சிதை -> சீதை.

காடு தீயால் கொளுத்தப்பட்டு சிதையான நிலமே விவசாய நிலம்.

தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி மலரும்போது எல்லாம் சரி செய்யப்படும்.

இராமனுக்கான எண் 9. அவனொரு கோழை.

அதனால் தான், திருநங்கைகளை திருநம்பிகளை ஒன்பது என்று அழைக்கும் வழமை உள்ளது.

இங்கே திருநங்கைகளை, திருநம்பிகளை அவ்வாறு அழைப்பது தவறு தான்.

ஆனால், ஒன்பது என்று அழைப்பதன் பின்னணி இதுதான்.

இதேபோல் இராவணனின் எண் 10.

இராவண இந்திர இரட்டர்களின் எண் 11.

யோசித்துப் பாருங்கள் 9 11.

இரட்டைக் கோபுர இடிப்பு நடந்த தேதி 9/11.

அதாவது ராமன் (ஒன்பது) vs இராவண இந்திரன் (பதின்னொன்று).

பொதுவாக, ஆட்றா ராமா, ஆட்றா ராமா என்று குரங்கை அழைப்பதும் இராமன் என்ற இனத் துரோகியை தமிழர்கள் இழிவுபடுத்தத் தான்.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் தான் இராமனும் கிருஷ்ணனும் என்றெல்லாம் பொய்க் கதைகளை அள்ளி விட்டான் யூத பிராமணன்.

ஆனால், உண்மையில் இராமன் என்ற தமிழினத் துரோகி வேறு, கிருஷ்ணர் வேறு, விஷ்ணு வேறு.

கருத்தானவன், அறிவானவன் -> கருத்தினன் - > கிருட்டினன் -> கிருஷ்ணன்.

இவர் காலம் சுமார் 7000 ஆண்டுகள்.

வீட்டில் இருப்பவன் -> வீட்டினன் -> வீட்னு -> விஷ்ணு

இவர் காலம் சுமார் 4,000 ஆண்டுகள்.

இவர் தான் சிறார் பள்ளியை உருவாக்கினார். அதுவே திருச் சிறார் பள்ளி யாகி திருச்சிறார் பள்ளி யாகி

திருச்சிராப்பள்ளி யாகி திருச்சியானது.

இராவணனின் மகன் இந்திரஜித்.

இந்திர சித்தன் -> இந்திர சித் -> இந்திரஜித்.

இரவில் வானத்தை ஆராய்ச்சி செய்பவன் -> இரவு வானன் -> இராவணன்.

இரா என்றால் தமிழில் இரவு என்று பொருள்.

இந்த இரா தான் தெலுங்கில் இரா என்றும் இராத்திரி என்றும் இரவைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

ராமனைக் கொன்ற இராவண இந்திரனை பழி வாங்கவே இந்த இரட்டைக் கோபுர இடிப்பு.

உண்மை வரலாறு repeat...
மறைமுகமாக...

தமிழர்களின் நிலங்களை காத்த தமிழர்களாகிய நம் குல தெய்வம் இராவணன்.

நவீன இராவணனாக நம்மை காத்தவர் தான் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

கடந்த 2009 ல் நடந்த ஈழ இனப்படுகொலையில் அண்ணன் பிரபாகரனின் ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு மயக்க ஊசி செலுத்தி அவரை வேறொங்கோ மறைமுகமாக கப்பலில் தப்பிக்க வைத்து அதன் மூலம் பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் ஒருபுறம் நம்பப் படுகிறது.

Sunday, March 12, 2023

சித்தர் கிருஷ்ணன் பிறந்த ஊர் திண்டுக்கல் - திண்டுக்கல் சாரதி (2008) திரைப்படம்






சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் அவர்கள் "சித்தர் கிருஷ்ணன் பிறந்த ஊர் திண்டுக்கலுக்கு அருகில் தான்" என நிறுவினார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக இரண்டு செய்திகளை இங்கு பதிவிடுகிறேன்.

2008 ல் வெளிவந்த திரைப்படத்தின் தலைப்பு "திண்டுக்கல் சாரதி". தமிழ்நாட்டில் நாம் எப்படி ஓட்டுநர் என்று சொல்கிறோமோ அதே போல் ஈழத்தில் சாரதி என்று சொல்வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சாரதி என்ற வார்த்தை தேரோட்டியையே குறிக்கும்.

மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு தேரோட்டிய சாரதி கிருஷ்ணன்.

சற்றுமுன் DSP என்ற ஒரு திரைப்படம் பார்த்தேன். கதை நடக்கும் ஊர் திண்டுக்கல். அதில் ஒரு காட்சியில் ஒரு வசனம். மாப்பிள்ளை விநாயகம் கதாப்பாத்திரம் பேசுவது "உங்க பிருந்தாவனத்தில் என் ராதையை வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?".

கிருஷ்ணன் பிறந்த விரிந்த வனமான பிருந்தாவனம் என்பது திண்டுக்கல் தான். 

Friday, March 10, 2023

வாத்தி (2023) திரைப்படம் சொல்லும் சித்தர் முருகனின் உண்மை வரலாறு




நான் ஏற்கனவே எழுதிய


என்ற பதிவினை வாசித்து விட்டு தொடருங்கள்.


சற்றுமுன் "வாத்தி" திரைப்படம் பார்த்தேன். வாத்தி என்ற வார்த்தை நம்முடைய அறிவியல் விஞ்ஞானியான முருகனையே குறிக்கும்.

சித்தர் முருகன் குருகுலம் நடத்தியவர். அன்றைய குமரிக்கண்டத் தமிழர்களின் குருவாக, ஆசானாக, வாத்தியாக விளங்கியவர்.

இந்த படத்தில் முருகன் பற்றி நமக்குத் தெரியாத சில மறைமுக செய்திகள் உள்ளன.

படத்தில் வாத்தியாக நடிக்கும் கதாப்பாத்திரத்தின் பெயர் முருகனான பாலமுருகன். முருகன் உருவாக்கிய சப்த கன்னிகளில் ஒரு பெண் தெய்வம் மீனாட்சி எனும் பச்சையம்மாள். இந்தத் திரைப்படத்தில் வரும் வாத்தி என்ற கதாப்பாத்திரத்தின் காதலி மற்றும் மனைவி கதாப்பாத்திரத்தின் பெயர் மீனாட்சி.

நான் இந்தப் பதிவில் சொல்வது கற்பனையெனில், இந்தப் படத்தின் கதாநாயகனின் பெயர் பாலமுருகன் என்றும் கதாநாயகியின் பெயர் மீனாட்சி என்றும் சொல்லி வைத்தாற்போல் ஏன் வைக்க வேண்டும்?

முருகனே கூட்டல், கழித்தல் தொடங்கி sin, cos tan,  போன்ற பல கணிதக் கோட்பாடுகளை மட்டுமல்ல இயற்பியல் வேதியியல் கோட்பாடுகளையும் கண்டறிந்தார் என்பது நமக்கு ஏற்கனவே தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் மூலம் தெரிந்ததே.

மேற்சொன்னதை நிறுவும் விதமாக இப்படத்தில் வாத்தியான நம் அப்பன் முருகனான பாலமுருகன் கணிதத்தோடு சேர்த்து வேதியியல் மற்றும் இயற்பியலையும் கற்பிப்பது போல காட்டியிருக்கின்றனர்.

இப்படத்தின் இயக்குநர் தெலுங்கர். காதநாயகன் தனுஷ் தெலுங்கர், காதநாயகி மலையாளி, நடித்த பிற அனைவரும் தமிழர் அல்லாதோர்.

இதன்மூலம் தமிழர் அல்லாத பிறமொழியாளர்களுக்கு, குறிப்பாக தெலுங்கர்களுக்கு நம்முடைய தமிழர்களின் பழைய வரலாறு அனைத்தும் தமிழர்களை விட அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

ஆனால், கடைசி வரை தமிழன் தன்னுடைய உண்மை வரலாறு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது தான் வேதனை.

நம்முடைய விஞ்ஞானிகளான

சிவன்
முருகன்
இராவணன்
கும்ப கர்ணன்
இந்திரன்
கிருஷ்ணன்
விஷ்ணு

போன்ற பல விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பரசுராமனின் களப்பிரர் என்ற கலவரப் படையெடுப்பின் மூலம் முக்கால் வாசியும், முகலாயப் படையெடுப்பிலிருந்து தமிழர்களை காக்க வருகிறோம் என்று சொல்லி விஜய நகர தெலுங்கு வடுகர்கள் இங்கு வந்து மீதமுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சுவடு தெரியாமல் அழித்ததோடு நம் சித்தர்கள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் மேலை நாட்டு யூதர்கள் கண்டுபிடித்ததாக (உதாரணத்திற்கு புவியீர்ப்பு விசையை கண்டறிந்த விஷ்ணுவுக்கு பதில் அவர் பெயரை குறிக்கும் படி ஐசக் நியூட்டன் என்பது போல) பொய் வரலாறு எழுதி அதையே இன்று வரை நம் பாடப்புத்தகத்தில் புவியீர்ப்பு விசையை கண்டறிந்தவர் நம் சித்தர் விஷ்ணு என்பதற்கு பதில் ஐசக் நியூட்டன் என்பது போன்ற பொய்களையே நாம் இன்று வரை உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், நம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அழித்த பரசுராமன் போன்ற யூத பிராமண வாரிசுகளுக்கும் விஜய நகரப் பேரரசின் வாரிசுகளான தெலுங்கு வடுகர்களுக்கும் நம் உண்மை வரலாறு நன்றாகவே தெரியும். அவற்றையெல்லாம் திரைப்படங்களில் காட்டி கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Tuesday, March 7, 2023

ஆராரோ பாட்டு - என்னுடைய புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த தாலாட்டுப் பாடலும்

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/UyYgXQkoefU


சில நாட்களுக்கு முன், என் இளைய மகள் நிறைமதி தூக்கத்திலிருந்து எழுந்து கண்ணை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் அம்மாவைத் தேடினாள். புட்டிப் பாலை குடித்து விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். கடைக்குச் சென்றிருந்த அவள் அம்மாவான என் மனைவியை அழைத்து வர இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றேன். அப்போது தோன்றிய மெட்டும் பாடல் வரிகளும் இவை.

நான் மெட்டமைத்து எழுதிய தாய்மையோடு தொடர்புடைய தாலாட்டுப் பாடலிது.

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.




ஆராரோ பாடும்
தாயைத்தான் தேடும்
தாயங்கே இல்லையென்றால்
துயில் கலைந்தே வாடும்

பாலுண்ணும் போதும்
தாலாட்டே கீதம்
தாயென்ற தெய்வம் பேசும்
கொஞ்சல் மொழி வேதம்

விளையாடும் மானே
விரல் பிடித்துத் தானே
தலையாட்டி நடக்கின்ற
தித்திக்கும் தேனே

கவிபாடும் உள்ளம்
கண்டாலே துள்ளும்
புவிமேலே அழகாக
பூப்பூக்கும் செல்லம் 

என்னோட பாட்டு
இளந்தென்றல் காற்று
கண்மூடித் தூங்கம்மா
காதோரம் கேட்டு 

Monday, February 27, 2023

பெண்ணே நீ யாரடி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த காதல் பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/qxPI1-zlTmE


வரும் மார்ச் 2 ம் தேதி (வியாழக்கிழமை) என் மனைவி ஆனந்தியின் பிறந்தநாள். என் கற்பனையில் உருவான இந்த புத்தம் புது மெட்டும் மெட்டுக்கு அமைந்த காதல் பாடலும் என் மனைவியின் பிறந்தநாளுக்காய் நான் அவளுக்கு கொடுக்கும் அன்பு பரிசு.

இன்னும் சில தினங்களுக்குள் இதே பாடலின் பெண் ஆணைப் பார்த்து பாடுவது போலான பதிவினை, விழியத்தினை வெளியிடுவேன். நன்றி.





உணர்வில் கலந்து உயிரில் நிறைந்த
எனது சுவாசம் நீயடி
உறக்கம் நுழைந்து கனவில் கலந்த 
காதல் கவிதை நீயடி

பெண்ணே நீ யாரடி
எந்தன் வானும் மண்ணும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வாழ்வும் சாவும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் கவியும் இசையும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் உயிரும் மூச்சும்

மனதில் எங்கும் மகிழ்வாய் நிறைந்த
எந்தன் தாயும் நீயடி
எனது உடலின் உள்ளே ஓடும்
இரத்த நாளம் நீயடி

பெண்ணே நீ யாரடி
எந்தன் இரவும் பகலும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வலியும் மருந்தும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் வெயிலும் மழையும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் அறிவும் மடமும்

அழகு மலராய் அருகில் நிற்கும்
எந்தன் அழகு தேவதை
விழிகள் நனைத்து விரலும் கோர்த்த
எந்தன் நெஞ்சின் மாமழை

பெண்ணே நீ யாரடி
எந்தன் விருப்பும் வெறுப்பும் 
பெண்ணே நீ யாரடி
எந்தன் நீரும் நெருப்பும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் முதலும் முடிவும்
பெண்ணே நீ யாரடி
எந்தன் பேச்சின் மௌனம் 

Sunday, February 12, 2023

அத்த மகளே ( என் கற்பனையில் உருவான புத்தம் புது கிராமிய மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/DRE0QoPogWM


தினம் தினம் அன்பு செலுத்தத் தேவையான அன்பான, அழகான, அமைதியான மனமிருந்தால், காதலர் தினம் என்று தனியாக நாம் கொண்டாட வேண்டியதில்லை.

என் கற்பனையில் உருவான இந்த மெட்டுக்கும் வரிகளுக்கும் நானும் என் மனைவியும் சேர்ந்து பாடிய பாடல்...

சதுரகிரி மலையடிவாரமான சாப்டூர் கிராமத்தைச் சேர்ந்தவள் என் மனைவி ஆனந்தி. அவள் சிறுவயது புகைப்படத்தைத் தான், இந்தக் காணொளியின் முதலாக இணைத்துள்ளேன். 





ஆண்
அத்த மகளே என்மேல்
ஆசவச்ச பெண்மயிலே
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கவச்ச உண்மையிலே

பெண்
அத்த மகனே என்மேல்
ஆசவச்ச மச்சானே 
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கும்படி வச்சானே 

ஆண் 
காலொடிஞ்சு நா கெடக்க
கல்லொடைக்க போன புள்ள
நாளுமொரு யுகமாச்சு
நானழுது குளமாச்சு
( அத்த மகளே )

ஆண்
நானுமுன்னப் பிரிஞ்சாலே
உசுருங்கூட என்னதில்ல 
ஆணுங்கொண்ட அன்பு மட்டும்
ஆயுசுக்கும் போவதில்ல
( அத்த மகளே )

ஆண்
பசியா நானிருந்தா
பதறிச்சோறு ஆக்கிடுவ
பக்கம்வந்து பக்கம்வந்து
பக்குவமா ஊட்டிடுவ
( அத்த மகளே )

ஆண்
சோறுதண்ணி சாப்பிடத்தா
சோர்வின்றி நீ உழைச்ச
தேருபோல எம் மனசில்
உசந்து நின்னு நீ சிரிச்ச
( அத்த மகளே )

ஆண்
ஆத்தோரம் தோப்போரம் - நா
நடந்து போகயிலும்
ஒன் நெனப்புத்தானே புள்ள
கட்டயிலே வேகயிலும் 
( அத்த மகளே )

ஆண்
அத்த மகளே என்மேல்
ஆசவச்ச பெண்மயிலே
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கவச்ச உண்மையிலே

பெண்
அத்த மகனே என்மேல்
ஆசவச்ச மச்சானே 
சுத்திச்சுத்தி வந்து என்ன
சொக்கும்படி வச்சானே

Saturday, February 4, 2023

வேல்முருகன் துதி ( புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும் )

முருகனுக்கு அறமான் என்ற பெயரும் உண்டு. அறம் என்பதற்கு உளத்தூய்மை என்றே பொருள். முருகன் அவ்வாறே உளத்தூய்மையோடு தமிழ் மக்களுக்காகவே குமரிக்கண்டத்தில் வாழ்ந்தார். 

குறவோன் என்பது முருகனின் முன்னோடியான சித்தர் சிவனையே குறித்தாலும் சிவனின் தாசனான வானாராய்ச்சி சித்தரான இராவணனையும் சேர்த்தே குறிக்கிறது. இந்த குறவோன் என்ற வார்த்தையே ஆங்கிலத்தில் crown ( கிரௌன் - தலையில் அணியும் கிரீடம், மகுடம் ) என்றாகி கொரோனா ( corono ) என்றானது. இதை விரிவாக இன்னொரு பதிவில் விரிவாக பேசலாம். 

அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்.


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/aVFq7alAV_0





கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
பால தாண்டாயுத பாணிக்கு அரோகரா
தமிழ்க்கடவுளுக்கு அரோகரா
அறிவியல் விஞ்ஞானிக்கு அரோகரா
அரோகரா அரோகரா 

அறமானே முருகனே
அறமானே முருகனே
அன்பின் வடிவோனே அழகிய தமிழ் மகனே
அன்பின் வடிவோனே அழகிய தமிழ் மகனே
முன்பாய் வாழ்ந்தோனே முதல்வனே மூத்தோனே 
அறமானே முருகனே

மறவேனே மறவனே
மறவேனே மறவனே
சித்தம் தெளிந்திட சித்தன் உனையேற்றும் 
கத்தும் குயிலென நித்தமும் ஒரு பாட்டும்
ரத்தம் உறைந்திட புத்தம் புது தோற்றம்
மறவேனே மறவனே
மறவேனே மறவனே

குறவோனே குறவனே 
மருத்துவம் செய்தோனே மகத்துவ மானோனே 
கருவளக் கடவுளாய் கதிர்காமம் நின்றவனே 
குறவோனே குறவனே
குறவோனே குறவனே

முருகனே அழகனே முத்தமிழ் அறிஞனே 
கருணையின் உருவமே இடும்பனே கடம்பனே
எந்தையே சிந்தையே முந்தைய கந்தனே 
விந்தையே எந்தன் சிந்தையில் நின்றோய்